News August 6, 2024
வங்கதேச நெருக்கடி: ஜமாத்-இ இஸ்லாமிக்கு தொடர்பு?

ஜமாத்-இ-இஸ்லாமி என்பது PAK-BAN ஆதிக்கம் செலுத்தும் இஸ்லாமிய அரசியல் கட்சியாகும். இது 1941ல் மௌலானா மௌதூதியால் நிறுவப்பட்டது. வங்கதேசத்தில் அதன் மாணவர் பிரிவான சத்ரா ஷிபிர் ISI-ன் கீழ் உள்ளது, இதுவே மாணவர் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறியதன் பின்னணியில் உள்ளது. ஆக.1ல் ஜமாத்-இ-இஸ்லாமியை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த ஷேக் ஹசீனா, வங்கதேச கலவரத்தின் பின்னணியில் அக்கட்சி இருப்பதாகக் கூறி தடை செய்தார்.
Similar News
News January 19, 2026
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 386 மனுக்கள் பெறப்பட்டன

தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 386 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.
News January 19, 2026
வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது தெரியுமா?

விண்வெளி கருப்பாக இருக்கும்போது வானம் மட்டும் எப்படி நீல நிறத்தில் உள்ளது என என்றாவது யோசிச்சிருக்கீங்களா? உண்மையில், சூரிய ஒளி வளிமண்டலத்திற்குள் நுழையும்போது பல நிறங்களை வெளியிடுகிறது. ஆனால், பிற நிறங்களை விட நீலம் & ஊதா போன்ற நிறக்கீற்றுகள் குறுகிய அலையை கொண்டுள்ளதால், அது அதிகமாக சிதறி வானம் முழுவதும் படருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதனால்தான் வானம் நீல நிறத்தில் தெரிகிறது. SHARE.
News January 19, 2026
₹6,000 அல்ல, இனி ₹8,000! வெளியான புது அப்டேட்

சிறு, குறு விவசாயிகளுக்கு PM கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ₹6,000-ஐ மத்திய அரசு வழங்கி வருகிறது. 4 மாதங்களுக்கு தலா ₹2,000 என 3 தவணைகளில் இத்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், இத்தொகையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று வரும் பிப்.1-ல் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், இத்தொகையை ஆண்டுக்கு ₹8,000 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


