News August 6, 2024
வங்கதேச விவகாரம்; இன்று பிற்பகல் விளக்கம்

வங்கதேச விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்று பிற்பகல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்க உள்ளார். இன்று காலை நடந்த அனைத்துக் கட்சிக்கூட்டத்தில், இந்திய-வங்கதேச எல்லையில் எடுக்கப்பட்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். இதன் தொடர்ச்சியாக, மக்களவையில் வங்கதேச விவகாரத்தில், இந்தியாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விவரிப்பார் என தெரிகிறது.
Similar News
News April 5, 2026
வேலூரில் ரூ.2.36 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டத்தில் கண்காணிப்பு குழுக்கள் தீவிர வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த சோதனைகளின் போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.36 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம், மதுபான வகைகள், போதைப் பொருட்கள், தங்கம், வெள்ளி மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
News April 5, 2026
IPL TOSS: சென்னை அணி பவுலிங்

RCB-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற CSK பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. CSK அணியில் ராகுல் சாஹருக்கு பதில் இன்று ஓவர்டன் களமிறங்கியுள்ளார். CSK முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுவரை சின்னசாமி மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதிய 12 போட்டிகளில் RCB 6 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
News April 5, 2026
தங்கம் விலை சவரனுக்கு ₹15,000 குறைந்தது

போர்ச் சூழல் காரணமாக தங்கத்தின் விலை கடந்த 1 மாதமாக பெரும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் மார்ச் 1 முதல் தற்போது வரை தங்கம் விலை சவரனுக்கு ₹15,000 அளவுக்கு குறைந்துள்ளது. மார்ச் 1-ல் ₹1,26,200-க்கு விற்பனை செய்யப்பட்ட 1 சவரன் தங்கம், இன்றைய நிலவரப்படி ₹1,11,600-க்கு விற்பனையாகிறது. அதேநேரம், ஏப்ரல் தொடங்கிய பிறகு <<19562286>>தங்கம் விலை<<>> மெல்ல மெல்ல அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


