News August 24, 2024
வாழை Vs கொட்டுக்காளி… வசூல் வின்னர் யாரு தெரியுமா?

மாரி செல்வராஜின் ‘வாழை’, வினோத் ராஜின் ‘கொட்டுக்காளி’ ஆகிய படங்கள் நேற்று வெளியாகின. இரு படங்களுக்கும் Positive விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, ‘வாழை’ படத்தை பிரபலங்கள் ஆஹா… ஓஹோ… என பாராட்டினர். இந்நிலையில், அப்படம் முதல் நாளில் ₹1.5 கோடியும், ‘கொட்டுக்காளி’ ₹43.56 லட்சமும் வசூலித்ததாக கூறப்படுகிறது. நீங்க பார்க்க விரும்பும் படம் எதுன்னு கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News November 11, 2025
ராசி பலன்கள் (11.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 11, 2025
தம்பதியரே, இந்த விஷயத்தில் எச்சரிக்கையா இருங்க…

இரவு நேரத்தில் போதுமான தூக்கம் இல்லையெனில் அது குழந்தையின்மை பிரச்னைக்கு காரணமாகலாம் என்கின்றன ஆய்வு முடிவுகள். சரியாக தூங்காத போது, தூக்கம்-விழிப்புக்கு காரணமான மெலடோனின், கார்டிசோல் ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கிறது. இதனால் ஆண், பெண் இருபாலருக்கும் பாலியல் ஹார்மோன்கள் சுரப்பு பாதிக்கப்படுகிறது. மேலும், தூக்கம் குறைவதால் ஏற்படும் உடல் பாதிப்புகளால் ஆண்களின் உடல் செயல்திறனும் குறையக்கூடும்.
News November 11, 2025
DNA சோதனை செய்ய வேண்டும்: மாதம்பட்டி ரங்கராஜ்

தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரி, மாதம்பட்டி ரங்கராஜ் HC-ல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு DNA சோதனை செய்ய வேண்டும் என ரங்கராஜ் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் DNA பரிசோதனையில் தான் தந்தை என்று தெரிய வந்தால் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை முழுவதும் ஏற்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


