News April 14, 2024
வெயிட் லாஸுக்கு உதவும் வாழைத்தண்டு ஜூஸ்!

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், மலச்சிக்கல், அசிடிட்டி, அஜீரணம் பிரச்னைகளிலிருந்து விடுபடவும் வாழைத்தண்டு உதவி புரிகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிப்போர் வாரத்திற்கு 3 நாள்கள், வாழைத்தண்டை பொடியாக நறுக்கிவிட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். அரைத்தெடுத்த ஜூஸில் சிறிது சீரகத்தூள், சிறிது மிளகுத்தூள், சிறிது கல் உப்பு சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் குடிக்கலாம்.
Similar News
News February 9, 2026
T20 WC: இலங்கையிடம் போராடி அயர்லாந்து தோல்வி

டி20 உலகக்கோப்பையில் 20 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை வெற்றிபெற்றது. இலங்கை அணி தரப்பில் குஷல் மெண்டிஸ்(56), கமிந்து மெண்டிஸ்(44) சிறப்பாக விளையாட 163/6 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய அயர்லாந்தில் யாரும் பெரிய ஸ்கோர் அடிக்காததால் 143 ரன்கள் ஆல் அவுட்டாகி தோல்வியை தழுவியது. இலங்கை தரப்பில் தீக்ஷனா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
News February 9, 2026
ராசி பலன்கள் (09.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News February 9, 2026
SBI லாபம் 13.06% அதிகரிப்பு

SBI வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் தனிப்பட்ட நிகர லாபம் 24.5% உயர்ந்து ₹21,028 கோடியை ஈட்டியுள்ளது. மொத்த வருவாயில் 9.7% வளர்ச்சியை எட்டியுள்ளது. ஒருங்கிணைந்த கணக்குகளின்படி, நிகர லாபம் ₹21,317 கோடியாக பதிவாகியுள்ளது. நிகர வட்டி வருமானம் ₹41,446 கோடியிலிருந்து ₹45,190 கோடியாக 9.4% அதிகரித்துள்ளதாக வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.


