News August 27, 2024
கனரக வாகனங்களில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை

நெல்லை மாவட்டத்தில் 10 சக்கரங்களுக்கு மேலுள்ள கனரக வாகனங்களில் கனிமங்கள் ஏற்றிச் செல்ல தடை விதித்து ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் விதிகளை மீறிய 100 க்கும் மேற்பட்ட லாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று குவாரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விதிமீறல் குறித்து பொதுமக்கள் 94981 01765 எண்களில் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
நெல்லையில் தேசிய புத்தக கண்காட்சி

நெல்லை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நடத்தும் 40வது தேசிய புத்தக கண்காட்சி நாளை (நவ.14) மாலை 5 மணிக்கு எஸ்.என் ஹை ரோடு நயினார் காம்ப்ளக்ஸ் அருகில் வைத்து நடைபெற உள்ளது. நிவேதிதா கல்விக் குழுமம் முத்துக்குமாரசாமி புத்தக கண்காட்சியை திறந்து வைக்கிறார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் முதல் விற்பனையை துவக்கி வைக்கிறார். புத்தகக் கண்காட்சி நவ.14 முதல் 30 வரை நடைபெறுகிறது.
News November 14, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [நவ.13] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News November 13, 2025
நெல்லை மாநகர காவல் ஆணையர் விளக்கம்

திருநெல்வேலி மகாராஜா நகர் பகுதியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தை சுற்றி இரவு நேரத்தில் மர்ம நபர் சுற்றி வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தது. வெடிகுண்டு மிரட்டல் விட்டதான தகவலும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி எந்த வெடிகுண்டு மிரட்டலும் இல்லை என விளக்கம்.


