News April 24, 2025
மயோனைஸ் விற்பனைக்கு தடை: அரசு அதிரடி முடிவு

பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு மாநில உணவு பாதுகாப்புத்துறை திடீர் தடை விதித்துள்ளது. ஓராண்டுக்கு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மையோனைஸ் செய்ய பயன்படுத்தப்படும் பச்சை முட்டையால், உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்புள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 9, 2026
மதுரை ஜல்லிக்கட்டில் 12,000 காளைகள், 5000 வீரர்கள் பதிவு

மதுரையில் நடைபெறவுள்ள பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 12,000 காளைகள் மற்றும் 5,000 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் 12,000க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 5,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போட்டியின் அளவையும் அதிரடியான முன்னேற்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.
News January 9, 2026
இனி Whatsapp-ல் தமிழக அரசின் சான்றிதழ்கள்

இனி பிறப்பு, இறப்பு உள்பட 50 வகையான சான்றிதழ்களை Whatsapp மூலம் பெறும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்களை பெற 7845252525 என்ற Whatsapp எண்ணிற்கு மெசேஜ் செய்ய வேண்டும். அதில் வரும் அடுத்தடுத்த ஆப்ஷன்களை கிளிக் செய்தால் மிக எளிதில் சான்றிதழ்களை வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News January 9, 2026
ஜனநாயகன் பிரச்னை சாதாரணம் தான்: கார்த்தி சிதம்பரம்

ஜனநாயகன் சென்சார் விவகாரத்தை TN-ன் மைய பிரச்னை என்று சொல்வதை ஏற்க முடியாது என காங்., MP கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுக்காததை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்நிலையில், ஏன் சென்சார் கொடுக்கவில்லை என்று எனக்கு தெரியாது. நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கும். இது சாதாரண விசயம் தான் என கார்த்தி கூறியுள்ளார்.


