News October 6, 2025
அரசியல் கூட்டங்களுக்கு தடை.. அன்புமணி காட்டம்

கரூர் நிகழ்வை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை தடை செய்வதை ஏற்க முடியாது என அன்புமணி தெரிவித்துள்ளார். புதிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், இது கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் செயல் என்றும் சாடியுள்ளார். மேலும், விதிமுறைகளை வகுக்கும் வரை மக்கள் கூடும் இடங்களில் கூட்டங்கள், ஊர்வலங்களை நடத்த TN அரசு இடைக்கால அனுமதி அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News October 6, 2025
திமுகவினர் புழல் சிறை செல்வது உறுதி: ஜெயக்குமார்

ஸ்டாலின் அரசு 5 மதிப்பெண் கூட பெறாத ஒரு ஜீரோ அரசு என ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் ஏராளமான சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் இருப்பதாகவும், அதிமுக ஆட்சி அமைத்தவுடன் அவற்றுக்காக திமுகவினர் புழல் சிறை செல்வது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவை பலம் மிகுந்த கட்சி போல் ஒரு பிரம்மையை மக்களிடையே உருவாக்குகின்றனர் என்று ஜெயக்குமார் சாடினார்.
News October 6, 2025
அக்டோபர் 6: வரலாற்றில் இன்று

*1940 – தென் இந்திய நடிகை சுகுமாரி பிறந்தநாள். *1962 – மெட்ராஸ் மாகாண முதல்வர் ப. சுப்பராயன் மறைந்த நாள். *1982 – நடிகர் சிபிராஜ் பிறந்தநாள். *2008 – இலங்கையின், அனுராதபுரத்தில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் அந்நாட்டு ராணுவத் தளபதி ஜானக பெரேரா உள்பட 27 பேர் கொலை. *2010 – இன்ஸ்டாகிராம் தொடங்கப்பட்ட நாள். *2023 – கடல் சார் ஆய்வாளர் ஒடிசா பாலு மறைந்த நாள்.
News October 6, 2025
இந்தியாவின் பாதுகாப்பற்ற நகரம் எது தெரியுமா?

இந்தியாவிலேயே பாதுகாப்பற்ற நகரமாக கொச்சி உருவெடுத்துள்ளது. NCRB தகவலின் படி, கடந்த 2023ல் கொச்சியில் ஒரு லட்சம் பேருக்கு 3192.4 வாரண்ட் இன்றி கைது செய்யக்கூடிய குற்றங்கள் பதிவாகியுள்ளன. 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 19 மெட்ரோ நகரங்களில் இந்த ஆய்வு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் டெல்லி (2105.3), சூரத் (1377.1), ஜெய்ப்பூர் (1276.8), பாட்னா (1149.5) ஆகிய நகரங்கள் உள்ளன.