News March 16, 2024
ஊட்டி பூங்காவில் பயணிகளுக்கு தடை

உதகை பூங்காவில் நடப்பாண்டு கோடை விழாவை முன்னிட்டு 5 லட்சம் மலர் நாற்று தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பூங்காவின் பிரதான புல் மைதானத்தில், காலை, மாலை நேரங்களில் ஸ்பிரிங்ளர் உதவியுடன் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க புல் மைதானம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 23, 2025
நீலகிரி ஆட்சியர் தலைமையில் முன்னேற்பாடு

நீலகிரி, விநாயகர் சதுர்த்தி விழா மிக விமர்சியாக கொண்டாடப்படும். அதேப்போல் காவல்துறையின் ஒத்திகையை நடைப்பெற்றது. விநாயகர் சதுர்த்தியின்போது அசம்பாவித ஏதேனும் நடக்காமல் காவல்துறையின் பாதுகாப்பு அதிகமாக காணப்படும் என காவல்துறையின் சார்பாக தெரிவித்தனர். இதன் முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகளுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
News August 23, 2025
நீலகிரி மாவட்டத்தில் உடனே வேலை!

நீலகிரி மாவட்டம் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் ரசாயன செயல்முறைக்கான பணியாளர் (Chemical Process Worker) என்ற 77 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மாதம் ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். விருப்பம் உள்ள நபர்கள் https://munitionsindia.in/carriers என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News August 23, 2025
குன்னூர் கிளை சிறையில் சமையலர் பணிக்கு ஆள் தேர்வு!

குன்னூர் கிளை சிறையில் காலியாக உள்ள ஒரு சமையலர் பணியிடத்தினை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடம் எஸ்.டி இன சுழற்சியில் நிரப்பப்பட உள்ளது. தகுதியான நபர்கள் சம்பந்தப்பட்ட சான்றிதழ்களின் நகலுடன் சிறை கண்காணிப்பாளர் மத்திய சிறை கோவை 18 என்ற முகவரிக்கு வரும் 01-09-2025 தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.