News May 2, 2024
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்குகுத் தடை

தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் குறித்து விளம்பரம் செய்தால் ஓராண்டு சிறை தண்டனையுடன் ₹5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இணையவழி சூதாட்டம், பந்தயத்தை விளம்பரப்படுத்துவோர் மீது நடவடிக்கை பாயும் எனக் கூறியுள்ள தமிழக அரசு, இந்தத் தடையை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மீறுவோருக்கு 1-3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ₹5-₹10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
Similar News
News September 21, 2025
டாஸ்மாக் கடைகளில் இனி ரூல்ஸ் மாறுது!

மதுக்கடைகளில் இனி வாடிக்கையாளர்களை வரிசையில் நிற்க வைத்து மதுபானங்களை விற்பனை செய்ய டாஸ்மாக் பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. அதனால், கடைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா காலத்தில் மதுப்பிரியர்களை வரிசையில் நிற்க வைத்து சமூக இடைவெளியுடன் மது விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்த ரூல்ஸ் உங்களுக்கு ஓகேவா?
News September 21, 2025
55,000 பேருக்கு வேலைவாய்ப்பு: ஸ்டாலின்

தூத்துக்குடியில் ₹30 ஆயிரம் கோடி முதலீட்டில், 55,000 பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் 2 கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதியதொரு அடித்தளமாக அமையும் என்றும் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இதன் மூலம் சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாறு தற்போது தூத்துக்குடியில் அமையவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News September 21, 2025
நவராத்திரியும் 9 தேவிகளும்

நாளைமுதல் நவராத்திரி விழா 9 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இந்த 9 நாள்களும், 9 தேவியை வழிபடுவார்கள். எந்த நாளில் எந்த தேவியை வழிபட வேண்டும் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்களும் உங்க வீட்டில் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி கொண்டாடுவீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.