News June 25, 2024
கெஜ்ரிவால் ஜாமினுக்கு தடை விதிப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமினுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், விசாரணை நீதிமன்ற நீதிபதி அமலாக்கத்துறை தரப்பு ஆவணங்களை சரியாக ஆராயவில்லை எனக் கூறி, உயர்நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
Similar News
News November 16, 2025
போதைப்பொருள் விவகாரத்தில் அடிபடும் ‘காஞ்சனா 4’ நாயகி

மும்பை போலீஸ் சமீபத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடித்தது. அதில் ‘காஞ்சனா 4’ நாயகி நோரா பதேகி பெயர் அடிப்பட்டது. ஆனால், இதில் தனக்கு சம்மந்தம் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். நான் பார்ட்டிக்கு போவதில்லை, வேலை செய்யவே நேரம் சரியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், நியூஸ்களின் வியூவ்ஸ்களுக்காக தனது பெயரை பயன்படுத்தினால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
News November 16, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 521 ▶குறள்: பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. ▶பொருள்: ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.
News November 16, 2025
2026 IPL ஏலம் அறிவிப்பை வெளியிட்ட BCCI

IPL அணிகள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில், மினி ஏலம் குறித்த அறிவிப்பை BCCI வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் மினி ஏலம் நடைபெற உள்ளது. 173 வீரர்களை IPL அணிகள் தக்க வைத்த நிலையில், மீதமுள்ள 77 வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. மொத்த அணிகளிடமும் சேர்த்து ₹237.55 கோடி தொகை உள்ளது. ஒரு அணி அதிகபட்சமாக 25 வீரர்களை கொண்டிருக்கலாம்.


