News October 10, 2024
ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்புக்கு தடை

ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாலும், சமூக வலைதளங்கள் மூலமாக பயங்கரவாதத்தை பரப்பியதாலும் இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக தமிழகத்தைச் சேர்ந்த பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 7, 2025
அன்புமணி பாமக தலைவர் இல்லையா? ராமதாஸ் தரப்பு

அன்புமணியை தலைவர் என அறிவித்து ECI அனுப்பிய கடிதங்கள் செல்லாது என நீதிமன்றம் கூறிவிட்டதாக ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். இதை அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவே அனுமானிக்க வேண்டும். இதனால் தற்போது, பாமகவுக்கு தலைவர் யாரும் இல்லாததால், நிறுவனர் என்ற முறையில் ராமதாஸ் தலைவராகலாம் என்றும், ராமதாஸ் தலைவர் என்பது சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று எனவும் கூறியுள்ளார்.
News December 7, 2025
நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை(டிச.8) காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுமுறை அறிவித்துள்ளார். இதனிடையே, மாவட்டத்தின் முக்கியமான கோயில் திருவிழா என்பதால் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
News December 7, 2025
நடுக்கடலில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி!

கிரேக்கத்தின் கிரீட் தீவு அருகே, புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலியாகினர். 2 பேர் மீட்கப்பட்ட நிலையில், பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆப்பிரிக்கா, ஆசியாவில் இருந்து மோதல்கள் மற்றும் வறுமை காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய பயன்படுத்தப்படும் முக்கிய நுழைவாயிலாக கிரீஸ் உள்ளது. இந்நிலையில், இந்த படகு எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


