News October 12, 2025
பிக்பாஸை தடை செய்யுங்க: வேல்முருகன்

பிக்பாஸ் நிகழ்ச்சியை அரசு தடை செய்ய வேண்டும் என தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். பிக்பாஸ், சண்டை, குரோதம், ஆபாசம், பொய், துரோகம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளின் களமாகவே இருக்கின்றது. இவை எதுவுமே தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய அடையாளங்கள் அல்ல. குறிப்பாக, தமிழ் குடும்பத்தின் அன்பு, அரவணைப்பு, விட்டுக்கொடுத்தல் ஆகிய விழுமியங்களை அழிக்கும் இந்நிகழ்ச்சியை உடனே தடை செய்ய வேண்டும் என்றார்.
Similar News
News March 15, 2026
தேர்தல் விதிமீறல்.. cVIGIL செயலியில் புகார் கொடுங்க!

சிவிஜில் (cVIGIL) என்பது தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகாரளிப்பதற்கு ECI உருவாக்கிய செயலி ஆகும். இதில் அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வது, பரிசுப் பொருள்கள் வழங்குவது, அனுமதித்த நேரத்தை மீறி பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் புகாரளிக்கலாம். எந்தவொரு விதிமீறலாக இருந்தாலும், அதுபற்றிய போட்டோ, வீடியோ, ஆடியோவை ஆதாரமாக பதிவேற்றி புகார் தெரிவிக்கலாம்.
News March 15, 2026
அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கைவிரல் ரேகையை மார்ச் 25-க்குள் பதிவு செய்ய வேண்டுமென மாவட்ட வாரியாக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால், இதுவரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள், அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று உடனே பணியை முடியுங்கள். இல்லையெனில், ரேஷன் அட்டையில் இருந்து பெயர்கள் நீக்கப்படலாம். ரேஷன் பொருள்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும். SHARE IT
News March 15, 2026
திரையில் ஹீரோ, நிஜத்தில் ஜீரோ: ஜவாஹிருல்லா

அதிமுக கூட்டணியில் தவெக இணையவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், விஜய்யை ஜவாஹிருல்லா மறைமுகமாக விமர்சித்துள்ளார். விஜய்யை திரையில் ஹீரோ, நிஜத்தில் ஜீரோ என்று சாடிய அவர், LPG விவகாரத்தில் விஜய் ஒரு அறிக்கையாவது வெளியிட்டு இருக்கிறாரா என கேள்வி எழுப்பினார். மேலும், அடிமைகளிடம் இவரும் அடிமையாகிவிட்டார் என்றும் எஜமானை (பாஜக தலைமை) பார்க்க டெல்லி சென்றுள்ளார் எனவும் சாடியுள்ளார்.


