News March 27, 2024
பம்பரம் சின்னம் அளிக்க உத்தரவிட முடியாது

மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது என்று உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட பம்பரம் சின்னத்தை ஒதுக்குமாறு அக்கட்சி கேட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் அதனை தர மறுத்துவிட்டது. இதனையடுத்து பம்பரம் சின்னத்தை ஒதுக்க உத்தரவிடுமாறு மதிமுக நீதிமன்றத்தை நாடியது. ஆனால், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
Similar News
News October 18, 2025
₹150 கோடியில் விளம்பரத்தை இயக்கும் அட்லீ

அல்லு அர்ஜுன் படத்தை இயக்கி வரும் அட்லீ, அதற்கு நடுவில் பிரம்மாண்ட விளம்பரம் ஒன்றை இயக்க உள்ளாராம். ₹150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த விளம்பரத்தில் ரன்வீர் சிங், பாபி தியோல், ஸ்ரீலீலா போன்ற ஸ்டார்கள் நடிக்கிறார்களாம். ‘Ching’s Desi Chinese’ என்ற பிராண்டிற்கான விளம்பரமாம் இது. இதற்காக பெரிய செட்கள் அமைக்கப்பட்டு, பிரமிக்க வைக்கும் VFX, கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.
News October 18, 2025
50 கோடி கஸ்டமர்கள்.. ₹7,379 லாபம் ஈட்டிய ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நடப்பாண்டின் 3-வது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டில் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியுள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல், ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் சராசரி வருவாய் (ARPU) மாதத்திற்கு ₹211.4-ஆகவும், ஜியோ பிளாட்ஃபார்ம்களின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 12.8% அதிகரித்து ₹7,379 கோடியாகவும் உள்ளது.
News October 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 492 ▶குறள்: முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும். ▶பொருள்: பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.