News March 19, 2024
பாமகவின் முடிவு தமிழக அரசியலை மாற்றியுள்ளது

ஒரே இரவில் பாமகவின் முடிவு தமிழக அரசியலை மாற்றியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கூட்டணியில் இணைந்த பாமகவுக்கு நன்றி தெரிவித்த அவர், ராமதாஸ் யோசித்த பல விஷயங்களை மோடி செயல்படுத்தி வருவதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவராக ராமதாஸ் இருக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சேலத்தில் நடக்கும் பிரதமரின் பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புணி பங்கேற்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
Similar News
News April 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: கொல்லாமை ▶குறள் எண்: 321 ▶குறள்: அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். ▶பொருள்: எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.
News April 29, 2025
பாஜகவில் இணையும் ப்ரீத்தி ஜிந்தா?

உங்களது சமீபகால பதிவுகள் பாஜக சார்பாக இருக்கிறதே, நீங்கள் அக்கட்சியில் இணைய போகிறீர்களா என ரசிகர் ஒருவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிடம் X தளத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு, அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என நடிகை பதிலளித்துள்ளார். மேலும், கோயில், மகா கும்பமேளாவிற்கு செல்வது, தன்னுடைய அடையாளத்தை நினைத்து பெருமைப்படுவது என்பது பாஜகவில் சேர்வதற்கான அறிகுறி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
பஹல்காம் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பு?

ஹமாஸ் அமைப்பு உலகெங்கும் உள்ள தீவிரவாதிகளுக்கு முன்னுதாரணமாக மாறிவிட்டதாக இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரீவன் அசார் தெரிவித்துள்ளார். இஸ்ரேலை தாக்கும்போது, அதை லைவ் வீடியோவாக வெளியிட்டது உலக தீவிரவாதிகளுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்ததாகவும், அதன் பிறகு அந்த அமைப்பினர் PoK-க்கு அழைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கும், ஹமாஸ் தாக்குதலுக்கும் ஒற்றுமை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.