News October 12, 2025
தொப்பை குறைய உதவும் பாலாசனம்!

✦முதுகு, கழுத்து, வயிற்றுப்பகுதி வலுவடைந்து, தொப்பை குறையும் ✦2 கால்களையும் மடக்கி, கால் பெருவிரல்கள் இரண்டும் ஒன்றின் மீது ஒன்று இணையும் படி அமருங்கள் ➥மூச்சை உள்ளிழுத்து, இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்குங்கள். மூச்சை வெளியே விட்டுக் கொண்டே, நெற்றி தரையில் படும் படி குனியுங்கள் ➥15- 20 விநாடிகள் இந்த நிலையில் இருந்து விட்டு, மெதுவாக பழைய நிலைக்கு திரும்புங்கள்.
Similar News
News March 12, 2026
வீட்டு கேஸ் சிலிண்டர் சப்ளை.. IOCL முக்கிய அறிவிப்பு!

வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு என தகவல் பரவிவரும் நிலையில், மக்கள் அவசர அவசரமாக கேஸுக்கு முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து IOCL முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்கள் பதற்றம் அடைந்து கியாஸ் புக்கிங் செய்யத் தேவையில்லை எனவும், அனைவரின் நேர்மையான கோரிக்கையும் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளது.
News March 12, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <
News March 12, 2026
TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? விஜய் ஆவேசம்

தங்கள் கல்லாப்பெட்டி, கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தும் முதல்வரே, TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டதாக தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.


