News April 19, 2024
₹2,011 கோடி லாபம் ஈட்டிய பஜாஜ்

2023-24 நிதியாண்டின் 4ஆவது காலாண்டில் ₹2,011 கோடி லாபம் ஈட்டியிருப்பதாக பஜாஜ் தெரிவித்துள்ளது. பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 2022-23 நிதியாண்டின் 4ஆவது காலாண்டில் ₹1,704 கோடி லாபம் ஈட்டியதாகவும், அது 2023-24 நிதியாண்டின் 4ஆவது காலாண்டில் அதிகரித்துள்ளதென்றும் பஜாஜ் தெரிவித்துள்ளது. ஜன-மார்ச்சில் ₹11,554 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாகவும் பஜாஜ் கூறியுள்ளது.
Similar News
News May 7, 2025
ஹீரோ உதட்டை கடித்து விட்டார்: மாதுரி தீட்சித்

தனது உதட்டை ஹீரோ கடித்து விட்டதாக பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித் கூறியுள்ளார். நாயகன் படம், இந்தியில் தயாவான் என்று 1988ல் ரீமேக் செய்யப்பட்டது. அதில் வினோத் கன்னா, மாதுரி நடித்தனர். படத்தில் நடித்தபோது வினோத் கன்னா அத்துமீறியதாகவும், உதட்டை கடித்ததாகவும், இதில் ரத்தம் வந்து விட்டதாகவும், இக்காட்சியை நீக்காமல் இருக்க ரூ.1 கோடி தனக்கு தரப்பட்டதாகவும் மாதுரி தீட்சித் கூறியுள்ளார்.
News May 7, 2025
AI-ல் மினிஸ்டர்.. ஏமாந்த காங்., நிர்வாகி

AI என்று தெரியாமல் நிர்மலா சீதாராமன் என நம்பி ₹33 லட்சத்தை காங்., நிர்வாகி இழந்துள்ளார். குன்னூரை சேர்ந்த லாரன்ஸுக்கு FB-ல் நிர்மலா சீதாராமன் பேசுவது போன்ற ஒரு லிங்க் வந்துள்ளது. உள்ளே சென்றவர் லட்சங்களில் டிரேட் செய்துள்ளார். நல்ல லாபமும் கிடைத்துள்ளது. ஒருகட்டத்தில் ரசீது கேட்டதும் எதிரில் இருப்பவர் ஆஃப் ஆகவே, ஏமாந்ததை தெரிந்து போலீஸுக்கு சென்றுள்ளார். ஆன்லைன் வர்த்தகர்கள் ஜாக்கிரதை!
News May 7, 2025
தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார். தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்; அதை மீறினால் உடனே நடவடிக்கை பாயும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.