News March 1, 2025
சீமான் பாதுகாவலருக்கு ஜாமின்

சீமான் வீட்டின் பாதுகாவலர் அமல்ராஜ், பணியாளர் சுபாகர் ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. நடிகை கொடுத்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க ஒட்டிய சம்மனை கிழித்தது, போலீசை பணி செய்யவிடாமல் தடுத்தது, போலீசாரை தாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஒரு வழக்கில் மட்டும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 12, 2026
மோடி ஆட்சியில் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை:ரகுபதி

விவசாயிகளுக்கு எதிராக திமுக செயல்படுவதாக PM மோடி வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். 3 வேளாண் சட்டங்கள் உள்பட விவசாயிகளுக்கு எதிராக அனைத்தையும் செய்துவிட்டு அவர்களை பற்றி பேச மோடிக்கு எந்த உரிமையும் இல்லை என அவர் சாடியுள்ளார். மோடி ஆட்சியில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், தேர்தல் வந்தாலே TN மீது PM-க்கு பாசம் வந்துவிடும் எனவும் விமர்சித்துள்ளார்.
News March 12, 2026
3 சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. அதிரடி தீர்ப்பு

நெல்லை, மேலப்பாளையத்தில் 2023-ம் ஆண்டில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் அந்த வழக்கை விசாரித்த நெல்லை போக்சோ கோர்ட், 40 வயதான குற்றவாளி ஆனந்த சேகருக்கு தூக்கு தண்டனை விதித்து இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் 3 சிறுமிகளுக்கும் தலா ₹7 லட்சத்தை இழப்பீடாக வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
News March 12, 2026
ரஜினியை மிரட்டியது திமுக: ஆதவ் அர்ஜுனா

ரஜினி அரசியல் கட்சி தொடங்காததற்கு திமுகவே காரணம் என ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக விடுத்த மிரட்டலால் தான் ரஜினி மனவலிமை இழந்து பின்வாங்கியதாக குறிப்பிட்ட அவர், விஜய் திமுகவை எதிர்த்து நிற்கிறார் என்றால் அவருக்கு மன வலிமை அதிகம் எனவும் பேசியுள்ளார். முன்னதாக, உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என ரஜினி கூறியது குறிப்பிடத்தக்கது.


