News November 19, 2024
பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமீன்!

பாலியல் புகாரில் சிக்கியுள்ள மலையாள நடிகர் சித்திக்கிற்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது நீதிபதி ஹேமா அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பின்னர், பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தனர். நடிகர் சித்திக்கிற்கு எதிராக பிரபல நடிகை ஒருவர் கொடுத்த புகாரை சிறப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 31, 2026
FLASH: தங்கம் விலை சவரனுக்கு ₹16,000 குறைந்தது

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான மாதமாக மார்ச் அமைந்துள்ளது. இம்மாதம் 1-ம் தேதி 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1,26,200 ஆக இருந்த நிலையில், தற்போது ₹1,10,160 ஆக சரிந்துள்ளது. இதன்மூலம், ஒரு மாதத்தில் சவரன் ₹15,940 குறைந்துள்ளது. இதேபோல், வெள்ளி விலையும் கணிசமாக குறைந்து 1 கிராம் ₹255-க்கு விற்பனையாகி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலே தங்கம் விலை சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
News March 30, 2026
BREAKING: அதிமுகவில் இணைந்தார்.. பிரேமலதா ஷாக்

தேமுதிகவின் ஓசூர் மாநகர் மாவட்டச் செயலாளர் ராமசாமியை கட்சியில் இருந்து நீக்குவதாக பிரேமலதா அறிவித்தார். இந்நிலையில் ஓசூர் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து அக்கட்சியில் இணைந்துள்ள ராமசாமி, வரும் தேர்தலில் அதிமுக வெற்றிபெற பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கிய சில மணிநேரங்களிலேயே ராமசாமி அதிமுகவில் இணைந்தது பிரேமலதா தரப்புக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
News March 30, 2026
CPM வேட்பாளர்கள் அறிவிப்பு!

திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை CPM வெளியிட்டுள்ளது. அதன்படி *திருவொற்றியூர் – எல்.சுந்தரராஜன், *கீழ்வேளுர் (தனி)- டி.லதா, *கந்தர்வக்கோட்டை (தனி) – எம்.சின்னதுரை, *பத்மநாபபுரம் – ஆர்.செல்லசுவாமி, பழனி – என்.பாண்டி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.<<-se>>#TNElection2026<<>>


