News January 8, 2025
புதிய தலைவராக பகதூர் சிங் தேர்வு

இந்திய தடகள சம்மேளனத்தின் புதிய தலைவராக பஞ்சாப்பைச் சேர்ந்த பகதூர் சிங் சாஹூ ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சண்டிகரில் நடந்த சம்மேளனத்தின் பொதுக்குழுவில், 2025-29 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில், குண்டு எறிதல் வீரர் பகதூர் புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002இல் புசனில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் பகதூர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 19, 2026
பெரம்பலூர்: அடிப்படை பிரச்சனைக்கு உடனடி தீர்வு

பெரம்பலூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த <
News January 19, 2026
பாமக எனக்கே சொந்தம்: வழக்கு தொடர்ந்தார் ராமதாஸ்

டெல்லி HC வழிகாட்டுதலின் படி, பாமகவுக்கு உரிமை கோரி சென்னை HC-ல், ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். கூட்டணி தொடர்பாக வேறும் யாரும் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது, அப்படி நடத்தினால் அது செல்லாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடி, சின்னமும் தங்களுக்கே சொந்தம் எனக்கூறி ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 19, 2026
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது பாஜக: தமிழிசை

ஜல்லிக்கட்டை ‘காட்டுமிராண்டி விளையாட்டு’ என்ற காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது என தமிழிசை விமர்சித்துள்ளார். பாஜக அரசுதான் தடையை நீக்கி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததாக கூறிய அவர், ஆனால் அதை தற்போது திமுகவின் விழாவாக மாற்றிவிட்டனர் எனவும் கூறியுள்ளார். மேலும்,
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.


