News September 4, 2025
முதுகு வலியை விரட்டும் ‘பத்ராசனம்’ (மலை போஸ்)

☆கை, கால் தசைகள் வலுவடையும். தண்டுவட பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லும்.
➥முதுகு நேராக இருக்கும்படி, நன்கு கால்களை விரித்து நிற்கவும்.
➥முன்னோக்கி உடலை வளைத்து, கைகள் முடிந்தவரை தரையில் பட, கால்களும், முதுகும் நேராகவே இருக்க வேண்டும்.
➥முடிந்தவரை உடலை வளைத்து தரையை தொட முயற்சிக்கவும். ➥இந்தநிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
Similar News
News September 4, 2025
இந்தியாவுக்கு வரி விதிப்பால், அமெரிக்காவுக்கு பயன்: டிரம்ப்

உலகில் வரி விதிப்பு பற்றி என்னை விட நன்றாக புரிந்து கொண்டவர், வேறு எவரும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. ஆனால், இப்போது அமெரிக்காவுக்கு வரி விதிக்கப்படாது என்று சலுகை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாகவும் கூறிய அவர், நாம் 50% வரி விதிக்காமல் இருந்திருந்தால், இந்தியா ஒருபோதும் இந்த சலுகையை அறிவித்திருக்காது என தெரிவித்துள்ளார்.
News September 4, 2025
டிடிவி கருத்துக்கு பதிலளிக்காத செங்கோட்டையன்

பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகளை மீண்டும் ஒன்றிணைக்கும் பணி நடந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால், ஜெ., தொண்டர்கள் ஒன்றிணைய வாய்ப்பில்லை என்று கூறிவிட்டு, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக டிடிவி நேற்று அறிவித்தார். இந்நிலையில், அவரின் கருத்துக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்த செங்கோட்டையன், TTV மனதில் எதை வைத்து அப்படி சொல்கிறார் என எனக்கு தெரியாது என கூறிவிட்டு காரில் வேகமாக சென்றுவிட்டார்.
News September 4, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

கடந்த 9 நாளாக தொடர்ந்து அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, 10-வது நாளான இன்று சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 குறைந்து ₹78,360-க்கும், கிராமுக்கு ₹10 குறைந்து ₹9,795-க்கும் விற்பனையாகிறது. கடந்த 9 நாள்களில் தங்கம் விலை ₹4,000 அதிகரித்த நிலையில், இன்று வெறும் ₹80 மட்டுமே குறைந்துள்ளது