News January 23, 2025
பேட்மிண்டன்: லக்சயா சென் வெற்றி; பி.வி.சிந்து தோல்வி

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்சயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ஜப்பானின் தகுமா ஒபயாஷியை எதிர்த்து விளையாடிய அவர், 21-9, 21-14 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, வியட்நாமை சேர்ந்த குயென் துய் லின்னிடம் 22-20, 21-12 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
Similar News
News August 27, 2025
வரலாற்றில் இன்று (ஆகஸ்ட் 27)

1908 – புகழ்பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் பிறந்த தினம்
1939 – உலகின் முதல் ஜெட் விமானம் சேவைக்கு தொடங்கியது
1972 – WWE வீரர் கிரேட் காளி பிறந்த தினம்
1979 – இந்தியாவின் தலைமை கவர்னர் மவுண்ட்பேட்டன் பிரபு மறைந்தார்
1991 – மால்டோவா விடுதலை தினம்
2003 – 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் செவ்வாய் கோள் பூமிக்கு மிக அருகில் வந்தது.
News August 27, 2025
இந்தியாவில் சுசூகி நிறுவனம் ₹70,000 கோடி முதலீடு

ஜப்பானைச் சேர்ந்த வாகன தயாரிப்பாளரான சுசூகி மோட்டார்ஸ் அடுத்த 6 ஆண்டுகளில், இந்தியாவில் ₹70,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார கார் ‘இ விட்டாரா’ அறிமுக நிகழ்ச்சியில் இதனை அந்நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ சுசூகி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒரு லட்சம் கோடி முதலீட்டில் 11 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News August 27, 2025
ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்குப்பதிவு

ராஜஸ்தானில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், தீபிகா படுகோன் ஆகியோர் உட்பட ஹூண்டாய் நிறுவனத்தின் 6 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தான் வாங்கிய காரில் உற்பத்தி குறைபாடுகள் இருப்பதால் ஹுண்டாய் நிறுவனம் மற்றும் அதன் பிராண்ட் தூதர்கள் மீது ராஜஸ்தானை சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார். சட்டப்படி பிராண்ட் தூதர்கள் குறைபாடான பொருள்களை விளம்பரப்படுத்தினால் அவர்களுக்கும் அதில் பொறுப்புள்ளது.