News March 1, 2025
பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஜோடி

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, சீனாவின் ஜியா ஜுவான்-மெங் யங் ஜோடி மோதியது. இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
Similar News
News March 1, 2025
இட்லியில் கேன்சர் அபாயம்: அதிர்ச்சி தகவல்

உணவுகளில் உடலுக்கு உகந்தது ‘இட்லி’ என்கிறோம். ஆனால், அந்த இட்லியே ஆபத்தானது என்றால்? ஆம், பெங்களூருவில் உணவுப் பாதுகாப்புத் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் உணவகங்களில் பெறப்பட்ட 251 இட்லி மாதிரிகளில் 54-ல் புற்றுநோய் ஏற்படுத்தும் ஆபத்தான ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இட்லியை வேகவைக்கும் தட்டுகளில் பிளாஸ்டிக் தாள்கள் வைக்கும்போது, அதிலிருந்து நச்சு ரசாயனங்கள் <<15611451>>இட்லிக்குள் கலந்து<<>> விடுகிறதாம்.
News March 1, 2025
அரையிறுதியில் யாருடன் மோதும் இந்தியா..?

AUS vs AFG போட்டிக்கு பிறகு, பி குரூப்பில் ஆஸி. அணி முதல் இடத்திலும், 2வது இடத்தில் SAவும் உள்ளனர். ஏ குரூப்பில் நியூசி. அணி முதல் இடத்திலும், 2வது இடத்தில் இந்தியாவும் உள்ளன. கடைசி ஆட்டத்தில் இந்தியா நியூசி.யை வென்றால், கிட்டத்தட்ட ஆஸி. அணியுடன் தான் அரையிறுதியில் மோதும். அதே நேரத்தில், தோற்றால், SA அணியுடன் மோத அதிக வாய்ப்புகள் உள்ளன. யாருடன் இந்தியா அரையிறுதியில் மோதும். கமெண்ட் பண்ணுங்க?
News March 1, 2025
டிரம்ப் ஜெலன்ஸ்கி கடும் மோதல்

அமெரிக்கா சென்றிருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை டிரம்ப் கடுமையாக தாக்கி பேசியதால், ஜெலன்ஸ்கி பாதியிலேயே வெளியேறினார். நீங்கள் 3ஆம் உலகப் போரைத் தொடங்குவது போல செயல்பட்டு, பல லட்சம் மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஜெலன்ஸ்கியை டிரம்ப் பொது வெளியில் கடுமையாக சாடினார். இதனால், ஆத்திரமடைந்த ஜெலன்ஸ்கி, டிரம்பின் விருந்தை புறக்கணித்து வெளியேறினார்.