News June 8, 2024

மனைவிக்கு தவறான உறவு? கணவர் விவாகரத்து பெறலாம்

image

மனைவி தவறான உறவு வைத்திருந்தால், அதை அடிப்படை காரணமாக வைத்து கணவர் விவாகரத்து பெறலாம் என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கீழ்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கலான மனுவை விசாரித்த நீதிபதிகள், மனைவியின் தவறான தொடர்பு கணவருக்கு இழைக்கப்படும் கொடுமை என்றும், இது இந்து திருமணச் சட்டத்தின் 13 (1) (i-a) ஆவது பிரிவின்கீழ் திருமணத்தை ரத்து செய்ய வழிவகை செய்கிறது எனவும் கூறியுள்ளனர்.

Similar News

News September 24, 2025

மக்கள் பணத்தில் தீபாவளி பரிசு கூடாது

image

தீபாவளிக்கு அதிகாரிகள் மற்றும் இதர துறைகளுக்கு பரிசு வழங்க அரசு பொது நிதியை பயன்படுத்த கூடாது என்று மத்திய நிதியமைச்சகம் தடை விதித்துள்ளது. நிதிக் கட்டுப்பாடு & அத்தியாவசியமற்ற செலவினங்களைக் குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மத்திய அமைச்சர்கள், வங்கிகள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும் பொருந்தும் என்றும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.

News September 24, 2025

ஏழுமலையான் தரிசனத்திற்கு இதுதான் சரியான நேரம்!

image

திருப்பதியில் கடந்த வாரம் பக்தர்களின் கூட்டம் அலைமோதி, தரிசனத்திற்கு 12- 14 மணி – நேரம் வரை ஆன நிலையில், தற்போது கூட்டம் குறைந்துள்ளது. புரட்டாசி மாத பிரம்மோற்சவ சேவை இன்று தொடங்கும் நிலையில், கூட்டம் குறைந்துள்ளது. இதனால், இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் காத்திருக்காமல் நேரடியாக அனுமதிக்கப்படுகின்றனர். பிரம்மோற்சவ சேவை தொடங்குவதால், பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 24, 2025

மூலிகை: நந்தியாவட்டையில் இவ்வளவு நன்மைகளா..

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி ➣நந்தியாவட்டை பூக்களை தண்ணீரில் இடித்து சாறு பிழிந்து கண்களில் விடுவதால், கண் பிரச்னைகள் நீங்கும் ➣இலைகளின் சாறு காயத்தின் மேல் பூசப்படுவதால் வீக்கம் குறையும் ➣நந்தியாவட்டையின் வேர் வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் ➣கல்லீரல் & மண்ணீரல் வியாதிகளுக்கு நந்தியாவட்டையின் வேர் தோல் மிகுந்த பயன்களை அளிக்கக் கூடியது. இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!