News May 16, 2024

RCB ரசிகர்களுக்கு கெட்ட செய்தி

image

சென்னை-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 68ஆவது லீக் போட்டி, வரும் 18ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் அங்கு மழை பெய்வதற்கு 45% வரை வாய்ப்புள்ளதாக கர்நாடக மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்படி மழையினால் போட்டி ரத்தானால் RCB அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழக்கும். அதே சமயம் CSK அணி நேரடியாக ப்ளே ஆஃப் தகுதி பெறும். போட்டி நடக்குமா? ரத்தாகுமா?

Similar News

News January 6, 2026

வங்கதேசத்தில் இந்து நபர் சுட்டுக் கொலை

image

வங்கதேசத்தில் இந்துக்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நீடித்து வருகிறது. <<18771561>>இந்து பெண்<<>> பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது இன்று வெளிச்சத்திற்கு வந்த நிலையில், தற்போது ராணா பிரதாப் (45) என்பவர் பொதுவெளியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சந்தையில் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் இக்கொலையை செய்துள்ளனர். கடந்த 3 வாரங்களில் நடந்த 5-வது சம்பவம் இதுவாகும்.

News January 6, 2026

5 ஆண்டுகளில் 2 லட்சம் வேலைகள் காலி!

image

தற்போது IT துறையில் வேலைவாய்ப்புகளை காலி செய்து வரும் AI, அடுத்ததாக வங்கி துறை மீது தனது பார்வையை திருப்பியுள்ளது. அந்த வகையில், ஐரோப்பிய வங்கிகளில் அடுத்த 5 ஆண்டிற்குள் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என சர்வதேச நிதி அமைப்பான Morgan Stanley எச்சரித்துள்ளது. மேலும், பல வங்கி கிளைகள் மூடப்படும் என்றும் கூறியுள்ளது. இது இந்தியா உள்பட உலகநாடுகளிலும் எதிரொலிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

News January 6, 2026

ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அரசு அலர்ட்

image

<<18755461>>ஈரானில்<<>> அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், தேவை இல்லாமல் இந்தியர்கள் அந்நாட்டிற்கு பயணிக்க வேண்டாம் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே அங்கு இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், போராட்டம் நடக்கும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. <<18742311>>ஈரானில்<<>> 10,000 இந்தியர்கள் வசிக்கும் நிலையில், அதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் ஆவர்.

error: Content is protected !!