News December 11, 2024
லேப்டாப், PC இறக்குமதிக்கான கெடு நீட்டிப்பு?

லேப்டாப், PC ஆகியவற்றை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட கெடுவை டிசம்பர் 31ஆம் தேதிக்கு பிறகும் மத்திய அரசு நீட்டிக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டில் அவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இறக்குமதிக்கு ஆகஸ்டில் அரசு தடை விதித்தது. எனினும், அனுமதி பெற்று டிச. 31 வரை இறக்குமதி செய்ய அனுமதித்தது. இந்த கெடு விரைவில் முடியவுள்ள நிலையில், அதன்பிறகும் நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News September 13, 2025
கூட்டணியில் இருந்தாலும் சமரசம் செய்யாத CPI(M)

கூட்டணியில் இருந்தாலும், மக்கள் பிரச்னையில் திமுக அரசுக்கு எதிராக சண்முகம் குரல் எழுப்புகிறார். இந்நிலையில், திண்டிவனத்தில் பட்டியல் சமூக ஊழியரை காலில் விழ வைத்த குற்றவாளிகளை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என்று அவர் கொந்தளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் திமுகவை சார்ந்தவர்கள் என்பதால் போலீஸ் தயக்கம் காட்டுகிறதா என கேள்வி எழுப்பிய அவர், இந்த அணுகுமுறை அரசுக்கு பெருமை சேர்க்காது என்றார்.
News September 13, 2025
உங்க லைஃப்ல இவங்கள் avoid பண்ணுங்க

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க, இந்த குணங்கள் கொண்டவர்களை தவிருங்கள்: 1. உங்களிடம் பொய் சொல்பவர்கள் 2. உங்களை அவமதிப்பவர்கள் / மரியாதை கொடுக்காதவர்கள் 3. உங்களை தம் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்பவர்கள் 4. உங்களின் தன்னம்பிக்கையை கெடுப்பவர்கள் / தலைகுனிய செய்பவர்கள். இதை செய்தாலே, உங்களுக்கு நல்ல காலம் தான். வேறு எந்த மாதிரி நபர்களை தவிர்க்க வேண்டும்? உங்கள் அனுபவத்தில் இருந்து சொல்லுங்களேன்.
News September 13, 2025
ASIA CUP: டாஸ் வென்று இலங்கை பந்துவீச்சு

ஆசியக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. தனது முதல் லீக் போட்டியில் ஹாங் காங்கை, வங்கதேசம் எளிதாக வீழ்த்தியது. அதனால் இந்த போட்டியிலும் வெற்றிப்பாதையை தொடர முயற்சிக்கும். அதேசமயம் முதல் போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி தொடரை வெற்றியுடன் தொடங்க கடுமையாக போராடும்.