News October 27, 2024

வாய் துர்நாற்றமா? கவலை வேண்டாம், இதை செய்யுங்க

image

*வெங்காயம், பூண்டு உணவுகளை தவிர்க்கவும் *நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுக்கவும் *அதிக தண்ணீர் குடிக்கவேண்டும். இது வயிற்றிலுள்ள நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாவை அழிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கும் * நல்லெண்ணெய் மூலம் வாய் கொப்பளிக்கலாம் *குடல் புண் இருப்பின் வாய் துர்நாற்றம் எழக்கூடும். அதனால் குடல் புண்ணுக்கு சிகிச்சை எடுக்கலாம் *நன்கு பல் துலக்குவதோடு, பேஸ்ட்டையும் மாற்றலாம். SHARE IT

Similar News

News January 14, 2026

வள்ளலார் பொன்மொழிகள்

image

*சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன. *புண்ணியமும், பாவமும் மனம், சொல், செயல் ஆகிய வழிகளில் நம்மை வந்தடைகின்றன. *எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வியாபித்திருக்கிறார் என்று அறிதலே கடவுள் பக்தியாகும். *உண்மையைச் சொல் அது உனது மரியாதையை பாதுகாக்கும். *மனதை அடக்க நினைத்தால் அடங்காது. அதை அறிய நினைத்தால் அடங்கும்.

News January 14, 2026

உதவ ஓடிவந்த டிரம்ப்பை கண்டித்த ரஷ்யா

image

ஈரானில் போராடுபவர்களுக்கு உதவிகள் தயாராக இருப்பதாக <<18850743>>டிரம்ப்<<>> தெரிவித்ததை ரஷ்யா கண்டித்துள்ளது. ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அமெரிக்கா நாசவேலைகளை செய்ய முயற்சிப்பதாகவும், இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், வெளிப்புற சக்திகளால் தூண்டப்பட்டு நடக்கும் போராட்டத்தை, அமெரிக்கா தனக்கு சாதமாக பயன்படுத்த முயற்சிப்பதாகவும் சாடியுள்ளது.

News January 14, 2026

PM மோடி தமிழர்களுக்கு தரும் மரியாதை: எல்.முருகன்

image

டெல்லியில் இன்று நடைபெறும் பொங்கல் விழாவில் PM மோடி நேரில் வந்து பங்கேற்பது, அவர் தமிழர்களுக்கு அளிக்கும் மரியாதை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், தமிழ் மொழியின் மீது PM மோடி அதிகமான பிரியத்தை வைத்துள்ளதாகவும், அதனால் தான் காசி தமிழ் சங்கமம் நான்காவது ஆண்டாக நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!