News April 7, 2025

பசுவுக்கு வளைகாப்பு… 500 பேருக்கு தடபுடல் விருந்து!!

image

நம்மூர் மக்களுக்கு மாடுகள் மீது எப்போதும் தனி பாசம் உண்டு. கர்நாடகவில், கர்ப்பமாக இருந்த பசுவிற்கு ஒரு குடும்பம் திருமண மண்டபத்தில் வளைகாப்பு நடத்தி பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறது. இதில், கலந்து கொள்ள 500 பேருக்கு அழைப்பு விடுத்து, தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அவர்கள் சுமார் ₹1.5 லட்சம் வரை செலவிட்டதாகவும் சொல்கின்றனர். பாசத்துக்கு முன் காசு கனக்கில்லையே!

Similar News

News April 10, 2025

கலைஞரின் கனவு இல்லம் குறித்த புது அப்டேட்

image

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்க சென்னையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே 13,388 வீடுகளின் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. அடுத்ததாக 2025-26ஆம் நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ₹3,500 கோடி நிதியும் ஒதுக்கப்படுள்ளது.

News April 10, 2025

அமித் ஷா வருகை… தமிழக அரசியலில் பரபரப்பு

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு சென்னை வருகிறார். தமிழக பாஜக தலைவர் யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக உள்ள நிலையில் அவரின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவரை, அதிமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிகிறது. சட்டப்பேரவை விடுமுறை என்ற போதிலும், அமித் ஷாவை சந்திக்க அதிமுக நிர்வாகிகள் சென்னையிலேயே முகாமிட்டுள்ளனர்.

News April 10, 2025

இந்தியாவுக்கு 4-ஆவது தங்கம்.. அசத்திய சித்து

image

அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் கலக்கி வருகின்றனர். ஏற்கெனவே 3 தங்கப் பதங்களை வென்ற இந்தியாவுக்கு 4-ஆவது தங்கம் கிடைத்துள்ளது. ஆடவர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் விஜய்வீர் சித்து தங்கம் வென்று அசத்தியுள்ளார். 4 தங்கத்துடன் சேர்ந்து இந்தியா 6 பதக்கங்களை வென்றுள்ளது.

error: Content is protected !!