News April 14, 2025
திருமணமான 4 மாதத்தில் குழந்தை… புலம்பும் கணவன்

தேனியில் திருமணமான 4 மாதத்தில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு இது 3-வது திருமணமாம். திருமணத்தின்போதே கர்ப்பமாக இருந்த அவர், உண்மையை மறைத்துள்ளார். கணவனுக்கு விஷயம் தெரிந்ததை அடுத்து அந்த பெண் வீட்டில் இருந்து மாயமானார். கணவன் கொடுத்த புகாரில் அந்த பெண்ணை போலீசார் தேடி கண்டுபிடித்தனர். தற்போது கைக்குழந்தையுடன் இருக்கும் அவர் கணவனுடன் வாழ விருப்பமில்லை என கூறிவிட்டாராம்.
Similar News
News November 21, 2025
புதுவை: இறுதிகட்ட மருத்துவ பட்டியல் வெளியீடு

புதுவை சென்டாக் நிர்வாகம் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்துகிறது. காலியாக இருந்த இடங்களுக்கு இறுதிகட்ட கலந்தாய்வு முடிந்துள்ளது. இதில் இடம்பெற்றவர்கள் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா இன்று தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
அரியலூர்: கல்வி கடன் பெறும் வழிமுறைகள்

அரியலூர் மாவட்டத்தில், டிப்ளமோ முதல் முதுகலை கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கப்படுகிறது. கல்வி கடன் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் கல்லூரியில் படிப்பதற்கான சான்று உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன், மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
நாளை உருவாகிறது புயல் சின்னம்.. கனமழை வெளுக்கும்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது, 26-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் 25-ம் தேதி வரை டெல்டா, தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. குறிப்பாக, நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று(நவ.21) கனமழைக்கு வாய்ப்புள்ளது. உங்கள் ஊரில் மழையா?


