News October 5, 2025
OTT-யில் இருந்து பாகுபலி படங்கள் நீக்கம்

Netflix தளத்திலிருந்து ‘பாகுபலி’ படத்தின் 2 பாகங்களும் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு, அதன் வருடாந்திர உரிமை முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், இவ்விரு பாகங்களையும் சேர்த்து உருவான ‘பாகுபலி எபிக்’ படம் ரிலீஸாகவுள்ளதால், அதற்காக நீக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அக்.31-ல் தியேட்டரில் இப்படம் ரிலீஸாகி ஓடி முடிந்த பின்பு, மீண்டும் 2 பாகங்களும் ஓடிடியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Similar News
News October 5, 2025
விஜய் முக்கிய முடிவு.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்

உச்சநீதிமன்றத்தை அணுக விஜய் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் துயர சம்பவ வழக்கில், விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆளும் அரசு இவ்விவகாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய விஜய், SC-ஐ நாடி, போலீஸ் செய்த தவறுகளை ஆதாரங்களுடன் தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
News October 5, 2025
நுரையீரல் கழிவுகளை நீக்கும் அமுக்கரா தேநீர்!

நுரையீரலில் கோர்த்துக் கொண்டிருக்கும் சளியை வெளியேற்றும் ஆற்றல் அமுக்கரா இலைக்கு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். அமுக்கரா இலை (3-4), மிளகு, மஞ்சள், சுக்கு, திப்பிலி, கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான அமுக்கரா தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். SHARE IT.
News October 5, 2025
பில்டப் கொடுக்க விரும்பவில்லை: நெல்சன்

‘ஜெயிலர் 2’ படம் குறித்து ஓவராக பேசி பில்டப் கொடுக்க விரும்பவில்லை என நெல்சன் கூறியுள்ளார். சிறிய விஷயங்களை ரசிகர்கள் ஏற்காவிட்டால் கூட படத்தை விமர்சிக்க தொடங்கிவிடுகின்றனர் என்ற அவர், படம் ரிலீஸான பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். சமீபத்தில் வெளியான ‘கூலி’ படம், அதன் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததாலேயே தோல்வி அடைந்ததாக கூறப்படும் நிலையில், நெல்சன் இவ்வாறு கூறியுள்ளார்.