News April 9, 2024
ஆதங்கத்தை கொட்டிய பா.ரஞ்சித்

தேவர் மகன், சின்ன கவுண்டர் படங்கள் வெளியான போது சாதிய படம் என்ற கேள்வி எழாதது ஏன் என பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடைபெற்ற PK ரோஸி திரைப்பட விழாவில் பேசிய அவர், “1990 காலக்கட்டத்தில் தமிழ் சினிமா மொத்தமாக மாறியிருந்தது. ஏராளமான சாதியப் படங்கள் வெளியாகின. சாதிகளை வெளிப்படையாக பேசிய படங்கள் வந்தன. அவை விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டதா?” போன்ற கேள்விகளை முன்வைத்தார்.
Similar News
News April 24, 2025
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகல்

அரசு ஊழியர்களை பணியைவிட்டு நீக்குதல், அரசு செலவுகளை குறைத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்யும் டாட்ஜ்(DOGE) துறை தலைவர் பதவியிலிருந்து எலான் மஸ்க் விலகியுள்ளார். USA அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு உருவாக்கப்பட்ட இந்த புதிய துறை மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் டிரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறுவேன் என்றும் மஸ்க் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
News April 24, 2025
இந்தியாவில் பாமாயில் இறக்குமதி அதிகரிப்பு

5 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவின் பாமாயில் இறக்குமதி உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பரில் விலை குறைவான சோயாபீன் எண்ணெயின் சந்தைப்பங்கு அதிகரித்ததால் வீழ்ச்சியடைந்த பாமாயில் இறக்குமதி, வருகிற ஜூலை – செப்டம்பரில் 7 லட்சம் டன் அதிகரிக்கும் என எண்ணெய் டீலர்கள் கூறுகின்றனர். தற்போது சோயாபீன் எண்ணெய் விலையை விட பாமாயில் விலை குறைந்ததால், அதன் தேவை அதிகரித்துள்ளதும் இறக்குமதி உயர்வுக்கு காரணம்.
News April 24, 2025
பஹல்காம் விவகாரத்தில் இந்தியாவின் அடுத்த பதிலடி!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் J&K காவல்துறையுடன் இணைந்து இந்திய ராணுவம் கூட்டு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. உதம்பூர் பசந்த்கரில் இன்று காலை நடத்தப்பட்ட என்கவுன்டரில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவ முகாமில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.