News August 18, 2024

நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் ஆகிறார் பி.சுசீலா

image

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகி பி.சுசீலா நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும்,தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Similar News

News November 19, 2025

விஜய்க்கு ஆதரவாக பேசிய A.C.சண்முகம்

image

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மறுபுறம் விஜய்க்கு ஆதரவாக புதிய நீதி கட்சித் தலைவர் A.C.சண்முகம் பேசத் தொடங்கியுள்ளார். 2026 தேர்தலில் களமிறங்கும் விஜய்க்கு வாக்கு வங்கி உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 50,000 வாக்குகள் வரை விஜய் பெறுவார். தவெகவில் இருந்து வலுவான வேட்பாளர்கள் போட்டியிட்டால் எளிதாக வெற்றிபெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

News November 19, 2025

இருமல் மருந்துகளை இனி ஈஸியாக விற்க முடியாது

image

ம.பி.யில் இருமல் சிரப் குடித்த 24 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இருமல் மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, டாக்டரின் பரிந்துரை சீட்டு, மருந்து விற்பனைக்கான உரிமை இருந்தால் மட்டுமே இருமல் மருந்து விற்பனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

News November 19, 2025

BREAKING: அதிமுக கூட்டணியில் இணைந்தனர்

image

2026-ல் வலுவான கூட்டணியை அமைக்க திட்டமிட்டு, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் அதிமுக தலைமை பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், ராஜகம்பள சமுதாய நலச் சங்க மாநிலச் செயலாளர் செந்தில்குமார், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத் தலைவர் P.S. மணி உள்ளிட்டோர் EPS-ஐ சந்தித்தனர். அப்போது 2026 தேர்தலில் அதிமுகவுக்கு தங்கள் சங்கங்களின் முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!