News September 30, 2024
பி.எட். தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

பி.எட். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் 2,040 இடங்கள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த 26-ம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று தரவரிசைப் பட்டியல் வெளியாகிறது. கலந்தாய்வு அக். 14 முதல் 19 வரை நடைபெறுகிறது. அக். 23-இல் முதலாமாண்டு வகுப்பு தொடங்குகிறது.
Similar News
News August 10, 2025
மாலைநேர உடற்பயிற்சி சிறந்தது: ஏன் தெரியுமா?

*காலையில் உடற்பயிற்சி செய்வதைவிட மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. *காலை நேர உடற்பயிற்சி, தசை செல்களை தூண்டி உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. *மாலை நேரத்தில் செய்யப்படும் உடற்பயிற்சியால், உடலின் முழு ஆற்றலும் அதிகரிக்கிறது. *இதனால் நீண்டநேரம் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். மன அழுத்தத்தையும் குறைக்கும்.
News August 10, 2025
மீண்டும் மிரட்டுமா லோகேஷ், அனிருத் கூட்டணி?

மாஸ்டரில் தொடங்கிய லோகேஷ் அனிருத் கூட்டணி வெற்றிகரமாக ‘கூலி’ வரை தொடந்து வருகிறது. இதனிடையே அனிருத்துடன் இருக்கும் போட்டோக்களை லோகேஷ் X-ல் பகிர்ந்துள்ளார். அதில் ஒவ்வொரு முறை நாம் இணையும் போதும் சரவெடியாகதான் இருக்கும் என பதிவிட்டுள்ளார். மேலும், இன்னொரு தாயின் வயிற்றில் பிறந்த எனது தம்பி அனிருத் என்றும் தொடர்ந்து கலக்குவோம் Rockstar எனவும் குறிப்பிட்டுள்ளார். கூலியிலும் இந்த கூட்டணி ஜெயிக்குமா?
News August 10, 2025
பொதுமக்களுக்கு பட்டா… வந்தது புதிய அறிவிப்பு

நகர நிலவரித் திட்ட பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சர்க்கார் புறம்போக்கு, அரசு மனை, ராயத்து வாரி மனை என மாற்றம் செய்து நில உடமைதாரருக்கு பட்ட வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 39, 428 உட்பிரிவுகளில் வகைப்பாடு மாற்ற பணிகளை மேற்கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருவாய் வட்டாட்சியர், நத்தம் நிலவரி வட்டாட்சியருக்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளது.