News November 15, 2024

ஐயப்ப சாமிகளே ரெடியா..!

image

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்பட்டது. வாண வேடிக்கை, பக்தர்களின் கோஷம் என சபரிமலை விழாக்கோலம் பூண்டது. நாளை முதல் (கார்த்திகை 1) மண்டல பூஜை வழிபாடு தொடங்கும் நிலையில், தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மண்டல பூஜை டிச.26ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை 2025 ஜனவரி 14ஆம் தேதியும் நடைபெற உள்ளன. அன்றைய தினங்களில், 90,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News March 1, 2026

ஓபிஎஸ்சுக்கு சபாநாயகர் பதவி வழங்க திட்டமிடும் திமுக

image

திமுகவில் இணைந்த OPS-க்கு முக்கியமான பொறுப்பு வழங்க ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. CM உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்த அவருக்கு, <<19251115>>திமுகவில் துணை பொதுச்செயலாளர்<<>> பதவி வழங்கப்படும் என அறிவாலய வட்டாரத்தில் ஏற்கெனவே பேச்சு அடிபட்டது. இந்நிலையில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், OPS-க்கு சபாநாயகர் பதவி வழங்கவும் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

News March 1, 2026

அரசியல் கட்சிகளின் முதல்படி எப்போது?

image

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக+, அதிமுக+, நாதக, தவெக என 4 முனைப்போட்டி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது களத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் எப்போது தொடங்கப்பட்டன என்பதை மேலே உள்ள போட்டோஸை swipe செய்து பாருங்கள். SHARE

News March 1, 2026

இந்தியா வந்த கமேனி… எப்போது தெரியுமா?

image

ஈரானின் உச்ச தலைவராவதற்கு முன்பு, 1980-81 காலகட்டத்தில் கமேனி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகமுள்ள கர்நாடகாவின் அலிப்பூரில் ஹாஸ்பிடல் ஒன்றுக்கு அவர் அடிக்கல் நாட்டியுள்ளார். அதேபோல், ஸ்ரீநகரில் உள்ள மசூதி ஒன்றிலும் உரையாற்றிய அவர், காந்தி, நேரு, மௌலானா அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்ட தலைவர்களை பாராட்டியும் பேசியுள்ளார்.

error: Content is protected !!