News May 15, 2024
அய்யாக்கண்ணு வாரணாசியில் போட்டியிட முடியாது

மோடி போட்டியிடும் வாரணாசியில் தன்னை போட்டியிட விடாமல் தடுத்ததாக அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். “தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்யாக்கண்ணுவுக்கு வாரணாசியில் என்ன வேலை? விளம்பரம் செய்து கொள்வதற்காக தேர்தலை பயன்படுத்தாதீர்கள். சமூக ஆர்வலர் என்றால் தமிழ்நாட்டில் சென்று போட்டியிடுங்கள்” என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
Similar News
News August 8, 2025
இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கிய சீனா

இந்திய பொருள்களுக்கு 50% வரிவிதித்த டிரம்பை, இந்தியாவிற்கான சீன தூதர் Xu Feihong சாடியுள்ளார். கொடுமைகாரர்களுக்கு ஒரு அங்குலம் கொடுத்தால், அவர்கள் ஒரு மைல் தூரம் செல்வார்களாம் என்ற பழமொழியை சுட்டிக்காட்டி அவர் விமர்சித்துள்ளார். மேலும், அமெரிக்கா வரிவிதிப்பை மற்ற நாடுகளை அழுத்தும் ஆயுதமாக பயன்படுத்துவதாகவும், ஐநா மற்றும் உலக வர்த்தக விதிகளை மீறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News August 8, 2025
ரேப் கேஸில் பாக்., வீரர் கைது

பாக்., கிரிக்கெட் வீரர் ஹைதர் அலியை பாலியல் வன்கொடுமை வழக்கில் இங்கி., போலீசார் கைது செய்துள்ளனர். பாக்., ஏ அணிக்காக விளையாட இங்கி., பயணம் மேற்கொண்டபோது, பாக்., வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அவரை சஸ்பெண்ட் செய்த PCB, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியது.
News August 8, 2025
ஆபரேஷன் சிந்தூரில் இஸ்ரேல் ஆயுதங்கள்: நெதன்யாகு

ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா தங்களது ஆயுதங்களை பயன்படுத்தியதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்தியா – இஸ்ரேல் கூட்டுத் தயாரிப்பான Barak-8 ஏவுகணைகள் மற்றும் HARPY டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், இவை போர்க்களத்தில் நன்கு செயல்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எதிரி நாட்டு ரேடார் அமைப்புகளை HARPY டிரோன்கள் துல்லியமாக தாக்கும். Barak-8 ஏவுகணை நீண்ட தூரம் சென்று தாக்கும்.