News October 10, 2024

ஆயுத பூஜை விடுமுறை: ஷாக் கொடுத்த விமானக் கட்டணம்

image

ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி பஸ்களிலும், ரயில்களிலும் முன்பதிவு முடிந்ததால், தற்போது விமானங்களை பலர் நாடி வருகின்றனர். ஆனால், இதுதான் நேரம் என்பதை போல, விமான நிறுவனங்கள், பயணக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன. சென்னை – கோவை விமானக் கட்டணம் ₹ 3,290 ₹ 10,996-ஆக உயர்ந்துள்ளது. சென்னை – தூத்துக்குடி இடையேயான கட்டணம் ₹ 5,006-இல் இருந்து ₹ 11,736 வரை அதிகரித்துள்ளது. உங்கள் அனுபவத்தை சொல்லுங்க.

Similar News

News December 8, 2025

மீண்டும் பேட்டை சுழற்ற தொடங்கிய ஸ்மிருதி

image

பலாஷுடன் திருமணம் நிறுத்தப்பட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த <<18495884>>ஸ்மிருதி மந்தனா<<>>, தனது அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டார். வரும் 21-ம் தேதி இலங்கைக்கு எதிராக டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில், அதற்காக அவர் பயிற்சி மேற்கொள்ள தொடங்கிவிட்டார். ஸ்மிருதி பயிற்சி பெறும் போட்டோ இணையத்தில் வைரலாகியது. சோகத்தில் முடங்கிவிடாமல் சிங்கப் பெண்ணாக அவர் ஜொலிப்பதாக நெட்டிசனகள் சிலாகித்துள்ளனர்.

News December 8, 2025

ஜே.டி.வான்ஸின் சர்ச்சை பதிவு: கொதித்த நெட்டிசன்கள்

image

மிகப்பெரிய அளவிலான குடியேற்றம் (Mass Migration) அமெரிக்கர்களின் கனவை திருடுவதாக, USA துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். இந்த கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ‘உங்கள் மனைவி உஷா இந்தியாவில் இருந்து USA-ல் வந்து குடியேறியவர் தானே’ என்றும் ‘உங்கள் மனைவியை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புங்கள்’ என பதிவிட்டு வருகின்றனர்.

News December 8, 2025

விஜயபாஸ்கர் வீட்டில் குவிந்த போலீஸ்.. பதற்றம் உருவானது

image

அதிமுக Ex அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை, இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, மோப்ப நாய், நிபுணர்கள் உதவியுடன், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விஜயபாஸ்கர் வீட்டிற்கு ஏற்கெனவே 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!