News July 8, 2025

‘அயோத்தி’ தெலுங்கு ரீமேக்.. ஹீரோ யார் தெரியுமா?

image

சசிகுமார் நடிப்பில் பெரும் வெற்றிப் பெற்ற அயோத்தி படம் தெலுங்கில் ரீமேக் ஆவதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. ஆக்‌ஷன் ஹீரோ நாகர்ஜூனா இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகமாக ஆக்‌ஷன், மசாலா கலந்து கமர்சியல் படங்களை அதிகம் விரும்பும் தெலுங்கு ஆடியன்ஸ் எதார்த்தமாக எடுக்கப்பட்ட அயோத்தி படத்தை ஏற்றுக் கொள்வார்களா?

Similar News

News July 8, 2025

BREAKING: CM ஸ்டாலின் – திருமாவளவன் சந்திப்பு!

image

அண்ணா அறிவாலயத்தில் CM ஸ்டாலினை, திருமாவளவன் சந்தித்து பேசினார். ஏற்கெனவே கூட்டணியில் உள்ள வைகோ கடந்த வாரம் சந்தித்து பேசியிருந்த நிலையில், இன்று திருமாவளவன் சந்தித்துள்ளார். 2026 தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், CM ஸ்டாலின் அடுத்தடுத்து கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். வரும் நாள்களில் கம்யூனிஸ்ட் மற்றும் மற்றக் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

News July 8, 2025

பிற்பகல் 12 மணி வரை… முக்கிய செய்திகள்!

image

➤<<16987572>>கடலூர் <<>>லெவல் கிராசிங்கில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய சோகம்.. 3 மாணவர்கள் மரணம்
➤கடலூர் பள்ளி வேன் விபத்து.. <<16988553>>CM ஸ்டாலின் <<>>& இபிஎஸ் இரங்கல்
➤<<16987858>>தங்கம் <<>>விலை சவரனுக்கு ₹400 உயர்வு
➤நாடு முழுவதும் <<16987412>>நாளை <<>>பொது வேலைநிறுத்தம்.. பஸ் சேவை பாதிப்பு ➤RCB வீரர்<<16987106>> யஷ்<<>> தயாள் மீது FIR ➤<<16987497>>சாதி <<>>குறித்த பேச்சு.. சர்ச்சையில் சிக்கிய ரஷ்மிகா

News July 8, 2025

யாரும் நெருங்க முடியாத கங்குலியின் ரெக்கார்ட்!

image

இன்று ‘தாதா’ <<16986348>>கங்குலியின் <<>>பிறந்தநாள். ODI-ல் தொடர்ந்து 4 முறை ஆட்டநாயகன் விருது வாங்கிய ஒரே வீரர் செளரவ் கங்குலி தான். 1997-ல் சகாரா கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக வரிசையாக 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை பெற்றார் கங்குலி. இந்த ரெக்கார்டை இன்று வரையிலும் யாராலும் வீழ்த்த முடியவில்லை. இது மட்டுமின்றி, ODI-ல் 11,363 ரன்களை குவித்து அதிக ரன்களை அடித்த 2-வது இந்தியரும் ‘தாதா’ தான்.

error: Content is protected !!