News April 19, 2024

அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்

image

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. விமான நிலையங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் விமான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விமான செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News January 17, 2026

பிரபல நடிகையுடன் தனுஷ் PHOTOS

image

தனுஷ் – மிருணாள் தாக்கூர் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும், காதலர் தினத்தன்று (பிப்.14) திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோஸ் வைரலாகிறது. ஆனால், இது AI ஆக இருக்கலாம் என நெட்டிசன்கள் கூறுகின்றனர். அதேநேரம், டேட்டிங், திருமணம் பற்றி தனுஷ், மிருணாள் இருவரும் இதுவரை வாய் திறக்கவில்லை. என்னவா இருக்கும்?

News January 17, 2026

அதிமுகவின் தேர்தல் அறிக்கை திமுகவின் டூப்: TRB ராஜா

image

அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியை அமைச்சர் TRB ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு டூப் போட்டு, தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுக பரிதாபமாகிவிட்டதாக அவர் சாடியுள்ளார். 2021-ல் திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியாது என கூறிய EPS, இப்போது அதே திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News January 17, 2026

விடுமுறை.. அரசு கூடுதல் மகிழ்ச்சியான அறிவிப்பு

image

தை அமாவாசை தினமான நாளை, பலரும் ராமேஸ்வரத்துக்கு செல்ல திட்டமிட்டிருப்பீர்கள். உங்களுக்காகவே அரசு சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளது. அதிலும் விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்று சென்னை, சேலம், கோவை, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து ராமேஸ்வரத்துக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளை மறுமார்க்கமாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

error: Content is protected !!