News December 4, 2025
AVM சரவணின் மறைவால் கண்ணீரில் தமிழ் திரையுலகம்

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் AVM சரவணனின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையே கண்ணீர் கடலில் தத்தளிக்க வைத்துள்ளது. CM ஸ்டாலின் முதல் ரஜினி, சிவகுமார் என அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அனைவரும் தங்களது இறுதி அஞ்சலியை அவரது பாதங்களில் சமர்ப்பித்து வருகின்றனர். AVM ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Similar News
News December 4, 2025
நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா

திருப்பரங்குன்றத்தில் மத கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக உத்தரவு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சுவாமிநாதன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தீபம் ஏற்ற அனுமதி வழங்கியுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், சுவாமிநாதன் மீது HC தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
77 லட்சம் வாக்காளர்களை இழக்கிறதா தமிழகம்?

தமிழகத்தில் நவ.4 முதல் SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், டிச.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், உயிரிழந்தோர் 25.72 லட்சம், கண்டறிய முடியாதோர் 8.95 லட்சம், நிரந்தர இடமாற்றமானோர் 39.27 லட்சம் என 77.52 லட்சம் வாக்காளர்கள் வரை நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மட்டும் 10.40 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.
News December 4, 2025
காஸா துயரம்: பிஞ்சு குழந்தைகள் உள்பட 5 பேர் பலி!

போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், காஸாவில் தாக்குதல்கள் தொடர்ந்தே வருகின்றன. சமீபத்திய இஸ்ரேல் தாக்குதலில் 2 பிஞ்சு குழந்தைகள் உள்பட 5 பேர் பலியான நிலையில், 32 பேர் காயமடைந்துள்ளனர். இதனிடையே, ஹமாஸ்-இஸ்ரேலிய படைகளின் மோதலில் 5 இஸ்ரேல் வீரர்களும் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், போர் நிறுத்தத்திற்கு பிறகான தாக்குதல்களில், இதுவரை 360 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


