News August 10, 2024
அவதார் 3ஆம் பாகத்தின் பெயர் வெளியீடு

அவதார் படத்தின் 3ஆம் பாகத்திற்கு ‘AVATAR: FIRE AND ASH’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இந்த தலைப்பை வெளியிட்டார். இதுவரை பார்த்திடாத பல பாண்டோராக்களைப் பார்க்கலாம் எனவும், இதில் வரும் காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், முந்தைய படங்களை விட உணர்வுபூர்வமான காட்சிகள் இதில் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 2, 2025
ரஷ்மிகாவுக்கு கதையை பரிந்துரைத்த சமந்தா

ரஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘The Girlfriend’ படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் கதையை, தனது தோழியான நடிகை சமந்தாவிடம் படிக்க கொடுத்துள்ளார், இதன் இயக்குநர் ராகுல் ரவீந்திரன். அப்போது, இப்படத்தில் சமந்தாவை நடிக்க வைக்க ராகுல் திட்டமிட்டுள்ளார். ஆனால் சமந்தாவோ, இக்கதை தனக்கு பொருந்தாது, ரஷ்மிகாவை நடிக்க வையுங்கள் என கூறியுள்ளார். இதன் பிறகே ரஷ்மிகா படத்தில் கமிட்டாகியுள்ளார்.
News November 2, 2025
தமிழை பற்றி பேசும் தகுதி மோடிக்கே உண்டு: நயினார்

தமிழை பற்றி பேசும் தகுதி PM மோடி ஒருவருக்கு மட்டுமே உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஐநா சபைக்கு போனாலும் சரி, அயோத்திக்கு போனாலும் சரி தமிழை பற்றி மட்டுமே மோடி பேசுவதாகவும் கூறியுள்ளார். பிஹாரிகளை திமுக அரசு துன்புறுத்துவதாக மோடி கூறிய நிலையில், இது தமிழர்களை அவமதிக்கும் செயல் என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
News November 2, 2025
லெனின் பொன்மொழிகள்

*நாத்திகம் என்பது பொதுவுடைமையின் இயல்பான மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும்.
*பிழைகள் மற்றும் தோல்விகள் இல்லாமல் கற்றல் ஒருபோதும் நிகழ்வதில்லை.
*நம்பிக்கை நல்லதுதான், ஆனால் கட்டுப்பாடு சிறந்தது.
*அடிக்கடி சொல்லப்படும் ஒரு பொய்க்கூட உண்மையாகிவிடுகிறது.
*பெண்ணுரிமை இல்லாத நாடு, காற்றில்லாத வீடு.
*அச்சத்தை விட ஆபத்தை ஒரு முறையாவது சந்திப்பது மேலானது.


