News March 28, 2025
அரசு பஸ்களில் தானியங்கி கதவுகள்: அமைச்சர் உறுதி

சட்டப்பேரவையில் நேற்று ADMK உறுப்பினர் ஜெயக்குமார், படிக்கட்டுகளில் பயணித்து பள்ளி மாணவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க பஸ்களில் தானியங்கி கதவுகள் அமைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், சென்னையில் உள்ள பஸ்களுக்கு தானியங்கி கதவுகள் அமைக்கும் பணி முடிந்துள்ளதாகவும், தமிழகத்தின் மற்றப் பகுதிகளிலும் பஸ்களில் படிப்படியாக தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
Similar News
News December 3, 2025
BREAKING: அமித்ஷாவை சந்தித்தார் ஓபிஎஸ்

டெல்லி விரைந்துள்ள ஓபிஎஸ், சற்றுமுன் அமித்ஷாவை சந்தித்து பேசிவருகிறார். NDA கூட்டணியில் இருந்து விலகிய பிறகு, அமித்ஷாவை ஓபிஎஸ் சந்திப்பது இதுவே முதல்முறை. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை கட்சியாக பதிவு செய்து, NDA கூட்டணியில் இடம்பெறுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. இன்னும் சற்றுநேரத்தில் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளது.
News December 3, 2025
இன்று ஒரே நாளில் விலை ₹5,000 உயர்ந்தது

இந்திய சந்தையில் வெள்ளி விலை மீண்டும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று(டிச.3) ஒரே நாளில் கிலோவுக்கு ₹5,000 உயர்ந்துள்ளது. இதனால் 1 கிராம் ₹201-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,01,000-க்கும் விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகை காலமான அக்டோபரில் கிடுகிடுவென உயர்ந்த வெள்ளி அக்.15 அன்று 1 கிராம் ₹207-ஐ தொட்டது. அதன் பின்னர் சரிந்து வந்த நிலையில், மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.
News December 3, 2025
40 சீட்டை டிமாண்ட் செய்கிறதா காங்கிரஸ்?

திமுகவுடன் காங்கிரஸ் கட்சியின் சீட் ஷேரிங் குழு இன்று பேச்சுவார்த்தையை தொடங்கவுள்ளதாக தெரிகிறது. இக்குழு 2026 தேர்தலில் 40 தொகுதிகளை கேட்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., 18-ல் வெற்றிப்பெற்றது. ஆனால் இம்முறை அதிக தொகுதிகளில் திமுக போட்டியிடும் திட்டத்தில் இருப்பதால், காங்., கேட்கும் தொகுதிகள் கிடைக்குமா என்பது சந்தேகமே என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


