News February 2, 2025
ஆட்டோ கட்டணம் உயர்வு

ஆட்டோ கட்டணம் ஏற்கெனவே அறிவித்தபடி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு 1 கிலோ மீட்டர் தூரத்திற்கும் ரூ.18 வசூலிக்கப்படுகிறது. இதேபோல் காத்திருப்பு கட்டணமாக 1 நிமிடத்திற்கு ரூ.1.50ம், இரவு நேர கூடுதல் கட்டணமாக மொத்த கட்டணத்தில் 50% அதிகமும் பெறப்படவுள்ளது.
Similar News
News March 2, 2026
இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மாசிமக திருவிழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். ஓசூர், சூளகிரி, தேன்கனிகோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் மார்ச் 3-ல் உள்ளூர் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, மார்ச் 4-ல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையாகும். +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.
News March 2, 2026
‘போர்’ நெதன்யாகுவுடன் PM மோடி பேச்சு

ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், நெதன்யாகுவுடன் PM மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இந்தியாவின் கவலையை தெரிவித்ததோடு, மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தியதாக தனது X பதிவில் PM மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், போர் நடவடிக்கைகளை விரைவில் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியா மீண்டும் அறிவுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
News March 2, 2026
அரையிறுதியில் இந்தியா யாருடன் மோதுகிறது?

T20 WC சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. இதையடுத்து, 2-வது அரையிறுதியில் இங்கிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறது. வரும் 5-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. தொடர்ந்து 3-வது முறையாக டி20 WC தொடர்களின் (2022, 2024, 2026) அரையிறுதியில் இங்கிலாந்து, இந்தியா விளையாடுகின்றன. முதல் அரையிறுதியில் SA Vs NZ மோதுகின்றன.


