News January 1, 2025
ஆட்டோ டிரைவரான கிராஃபிக் டிசைனர்..

மும்பையைச் சேர்ந்த கமலேஷ் காந்தேகர் Graphics Design துறையில் 14 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். அதில், மேனேஜர் நிலை வரை சென்ற அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதால், வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மனம் சோர்ந்த அவர், கடைசியில் ஆட்டோ ஒன்றை வாங்கியுள்ளார். ஒருவருக்கு கீழ் உழைப்பதை விட, இப்படி உழைத்தால் சுயமரியாதை, பணம் இரண்டும் கிடைக்கும் எனக்குறிப்பிட்டு linkedinல் அவர் பதிவிட்டது வைரலாகியுள்ளது.
Similar News
News December 11, 2025
தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $30.63 உயர்ந்து, $4,237.81-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை கண்டு வருகிறது. நேற்று (டிச.10) சவரன் ₹96,240-க்கு விற்பனையானது.
News December 11, 2025
சற்றுமுன்: திமுகவில் இருந்து அதிரடி நீக்கமா?

அறிவாலயத்தில் CM மு.க.ஸ்டாலினை பார்க்க முடியவில்லை என்றும், தலித் என்பதால் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டிய முன்னாள் MLA ஆடலரசன், தனது திமுக உறுப்பினர் அட்டையை தூக்கி எறிந்தார். இது ஊடகங்களில் வெளியான நிலையில், அவரை அழைத்து ஸ்டாலின் பேசியிருந்தார். இந்நிலையில், இச்சம்பவம் அடங்கிய பிறகு, ஆடலரசனை கட்சியில் இருந்து நீக்க திமுக தலைமை முடிவெடுத்து இருப்பதாக அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.
News December 11, 2025
தமிழகம் வருகிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி முர்மு வரும் 17-ம் தேதி வேலூர், ஸ்ரீபுரம் நாராயணி பொற்கோயிலுக்கு வருகை தர உள்ளார். அவருடன் கவர்னர் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் வருகின்றனர். ஸ்ரீநாராயணி அம்மன், 1,800 கிலோ வெள்ளியால் அமைக்கப்பட்ட விநாயகர், சொர்ணலட்சுமி, பெருமாள் கோயில்களில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தியான மண்டபத்தை திறந்து வைத்து மரங்களை நடுகிறார்.


