India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு வயதாகி வருவதால், அவர் 2026 டி20 உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்று கூறப்படுகிறது. அதனால், டி20 அணியையும் வழிநடத்தும் வகையில் கில்லுக்கு இந்த புதிய வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் கில், ODI அணியின் துணை கேப்டனாகவும் இருக்கிறார்.
INDIA கூட்டணி கட்சி MP-க்கள் இன்று நாடாளுமன்றத்தில் இருந்து தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்த உள்ளனர். 2024 லோக்சபா தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டே பாஜக ஆட்சிக்கு வந்ததாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார். அதேபோல், பிஹார் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த 2 புகாரை விசாரிக்க வலியுறுத்தி இன்று பேரணி செல்ல உள்ளனர்.
*1950 – ஆப்பிள் ஐபோன் நிறுவனர் ஸ்டீவ் வாஸ்னியாக் பிறந்தநாள். *1954 – கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கேற்ற 16 தமிழர்கள் காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். *1961 – இந்தியாவின் முன்னாள் போர்த்துக்கீசியப் பகுதிகளான தாத்ரா, நகர் ஹவேலி ஆகியன இணைக்கப்பட்டு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி என்ற ஒன்றியப் பகுதி ஆக்கப்பட்டது.
ஹமாஸை வீழ்த்த காஸா முழுவதும் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதை தவிர தங்களுக்கு வேறு வழியே இல்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காஸாவை சுதந்திரப்படுத்துவதே தங்களது குறிக்கோள் எனவும், மக்கள் பலி, உதவிப்பொருட்கள் பற்றாக்குறைக்கு ஹமாஸே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், காஸாவில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக ஒரு குறுகிய கால அட்டவணை தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்வது சிலருக்கு பொறாமையை ஏற்படுத்தி இருப்பதாக டிரம்ப்பை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மறைமுகமாக விமர்சித்துள்ளார். நானே எல்லோருக்கும் முதலாளி என்று கொக்கரிப்பவர்கள், இந்தியா எப்படி வேகமாக வளரலாம் என நினைப்பதாகவும், அதனாலேயே இந்தியா மீது அதிக வரிவிதித்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 6.1 ரிக்டர் என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். முன்னதாக, ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
*மற்றவர்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால், அந்த நற்பெயர் உனக்கு வேண்டாம். *வெற்றியோ தோல்வியோ எது வரினும் கடமையை செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான். *அறிவைத் தேடி ஓடுங்கள்; நாளைய வரலாறு உங்கள் நிழலாகத் தேடி ஓடிவரும்.
தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பிஹார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா 2 வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், வரும் 14-ம் தேதிக்குள் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிஹாரில் சமீபத்தில் தான் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (SIR) செய்யப்பட்டது.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார். துபாய் ஆடுகளங்களில் இந்தியாவை வீழ்த்துவது கடினமான விஷயம் எனவும், கோலி, ரோஹித் ODI-களில் சிறப்பான ரெக்கார்டுகளை வைத்திருப்பதால், அவர்களுக்கு BCCI தொடர்ந்து வாய்ப்பு அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், கில் எதிர்காலத்தில் ரசிகர்களின் நம்பிக்கையை சுமந்து செல்லும் கேப்டனாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் Wegovy, Mounjaro ஆகிய 2 உடல் எடை குறைப்பு ஊசிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், கடந்த மார்ச் இறுதியில் விற்பனைக்கு வந்த Mounjaro, 4 மாதங்களிலேயே ₹100 கோடி, ஜூலையில் மட்டும் ₹47 கோடி அளவிற்கு விற்பனையாகியுள்ளது. அதேபோல், ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வந்த Wegovy, 2 மாதங்களில் ₹10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் உடல் எடை குறைப்பு சந்தையின் மதிப்பை இவை காட்டுகின்றன.
Sorry, no posts matched your criteria.