News March 12, 2025

முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்

image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சையது அபித் அலி (83) அமெரிக்காவில் காலமானார். இவர், 1967 முதல் 1974 வரை 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1,018 ரன்கள் குவித்து 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இவர் 8000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். ஹைதராபாத்தில் பிறந்த இவர், ஓய்வு பெற்ற பின் அமெரிக்காவில் கிரிக்கெட் பயிற்றுவிப்பதற்காக அங்கே சென்று செட்டில் ஆகிவிட்டார்.

News March 12, 2025

விஜய்யை இழிவாக சித்தரித்து கார்ட்டூன்… குவியும் கண்டனம்…

image

தவெக தலைவர் விஜய்யை தினமலர் பத்திரிகை இழிவாக சித்திரித்திருப்பதாக அக்கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். விஜய்யை ஆடு போல சித்திரித்திருக்கும் தினமலர், ஆதவ் அர்ஜுனா இரட்டை இலையை புகட்டுவது போல கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் தவெக செய்தித் தொடர்பாளர் லயோலா மணி, தினமலர் வரம்பு மீறி செல்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

News March 12, 2025

மரடோனா மரண வழக்கு: விசாரணை தொடங்கியது

image

கால்பந்து விளையாட்டு ஜாம்பவனான அர்ஜென்டினாவின் மரடோனா (60) 2020இல் மாரடைப்பால் காலமானார். அதற்கு முன்பு ரத்த உறைதல் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டுக்கு திரும்பியிருந்தார். இதனால் மருத்துவ குழுவின் கவனக்குறைவே மரணத்திற்கு காரணமென குற்றஞ்சாட்டி 8 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. 8 பேர் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும்.

News March 12, 2025

₹87 லட்சம் கோடி காலி

image

கடும் சரிவை சந்தித்துவரும் இந்திய பங்குச்சந்தைகள், சுமார் $1 ட்ரில்லியன் சந்தை மதிப்பை இழந்திருப்பதாக அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்திய ரூபாயின் மதிப்பில் ₹87 லட்சம் கோடி. கடந்த டிசம்பர் மாதம் உச்சம் தொட்ட நிஃப்டி, அதிலிருந்து 16% மதிப்பினை இழந்திருக்கிறது. சிறிய நிறுவனங்கள் பெரும் சரிவை கண்டிருக்கின்றன. இதனால், முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

News March 12, 2025

மகாராஷ்டிராவில் தீவிரமாகும் ஹலால் மட்டன் எதிர்ப்பு

image

மகாராஷ்டிராவில் ஹலால் மட்டன் எதிர்ப்பு இயக்கம் தீவிரமாகிறது. இதற்கு அமைச்சர் நிதிஷ் ரானே தலைமை வகிக்கிறார். அவருக்கு தேஜகூ தலைவர்கள் ஆதரவு அளிக்கின்றனர். ஆடு, காேழி ஆகியவற்றை இந்து மத வழக்கப்படி கொல்லும் ஜத்கா முறையை ஊக்குவிக்கின்றனர். ஹலால் சான்றுக்கு பதிலாக மல்ஹர் சான்று அறிமுகப்படுத்தப்பட்டு, ஜத்கா கடைகள் ஒரே குடையின்கீழ் கொண்டு வரப்படுகின்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

News March 12, 2025

சில்லரை பணவீக்கம் சரிந்தது

image

பிப்ரவரி மாதத்திற்கான சில்லரை பணவீக்கம் 3.61 சதவீதமாக சரிந்துள்ளது. காய்கறிகள் மற்றும் இறைச்சியின் விலை குறைந்தது இந்த சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. கொரோனாவுக்குப் பின் கடுமையாக உயர்ந்த பணவீக்கத்தால் மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது, பணவீக்கம் குறைந்து வருவது, வங்கிகளின் வட்டி விகிதத்தையும் குறையச் செய்யும் என்கின்றனர் வல்லுநர்கள்.

News March 12, 2025

பள்ளி இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு

image

தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான இறுதித் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு இறுதித்தேர்வு ஏப்ரல் 1 முதல் 21 வரை நடைபெறவுள்ளது. 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு இறுதித்தேர்வு ஏப்ரல் 8 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

News March 12, 2025

‘அநாகரிகத்தின் அடையாளமே பாஜக அரசுதான்’

image

திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். நாகரிகத்தை பற்றி பாஜக, நமக்கு பாடம் எடுக்கிறது. நாகரிகத்தை உலகுக்கே முதலில் சொல்லிக் கொடுத்தது தமிழர்கள்தான். அநாகரிகத்தின் அடையாளமே மத்திய அரசு பாஜக அரசுதான் என்பது நாட்டுக்கே தெரியும். எங்களிடமே வரி வசூலித்துவிட்டு எங்களுக்கே நிதி கொடுக்காமல் இருப்பதுதான் நாகரிகமா? என ஸ்டாலின் வினவினார்.

News March 12, 2025

இந்திக்கு பதிலாக இந்தியாவை வளருங்கள்: ஸ்டாலின்

image

மோடி என்றால் வளர்ச்சி என பாஜகவினர் கூறுகிறார்களே, அப்படி என்ன இந்தியாவை அவர் வளர்த்துவிட்டார்? என ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதுதான் வளர்ச்சியா? என வினவிய அவர், இந்திக்கு பதிலாக இந்தியாவை வளர்க்கும் வழியை பாருங்கள் என்றும் சாடினார். மேலும், உயிரே போனாலும் பாசிசத்துக்கு அடிபணிய மாட்டோம் எனவும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.

News March 12, 2025

கார் கண்ணாடியில் சிக்கி குழந்தை பலி

image

லக்னோவில் கார் கண்ணாடி தானாக மூடியதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோஷன் என்பவர் புதிய காரை வாங்கி குடும்பத்தை கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, குழந்தை ஒன்று தலையை வெளியே நீட்டியிருக்க, டிரைவர் காரை ஆன் செய்துள்ளார். அப்போது, கண்ணாடி தானாக உயர்ந்ததால் குழந்தையின் கழுத்து சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

error: Content is protected !!