India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசுப் பள்ளி குழந்தைகளை வஞ்சித்து, தமிழக அரசு அரசியலை முன்னெடுத்துச் செல்வதாக தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். தனியார் பள்ளி பிள்ளைகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை என்ற உண்மையை உங்களால் மறுக்க முடியுமா? என CM ஸ்டாலினுக்கு அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தனியார் பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்படவில்லை என்று கூற முடியுமா? எனவும் அவர் வினவினார்.
மாருதி சுசூகி தனது செடான் மாடலான CIAZ கார் தயாரிப்பை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2014ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காரின் விற்பனை சரிந்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 7,726 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. மறுபுறம், ஹோண்டா சிட்டி, விர்டஸ், வெர்னா போன்ற போட்டியாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் போட்டி காரணமாக, CIAZ-ன் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்ததாகத் தெரிகிறது.
லிடியன் நாதஸ்வரத்தை சிம்பொனி எழுத சொன்னதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா விளக்கமளித்துள்ளார். அதில், லிடியன் தன்னிடம் சிம்பொனி கம்போஸ் பண்ணதாக ஒரு டியூனை போட்டு காண்பித்ததாகவும், அது சிம்பொனி இல்லை, சினிமா பாடல் போல் உள்ளதாகத் தான் கூறியதாகவும் தெரிவித்தார். மேலும், சிம்பொனி என்றால் என்னவென்று தெரிந்துவிட்டு, கம்போஸ் செய்யுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 203 ▶குறள்: அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல். ▶பொருள்: தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் 7G ரெயின்போ காலனி. யுவன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. இதன் 2ம் பாகத்தையும் செல்வராகவனே இயக்கி வருகிறார். இன்னும் 2 வாரத்தில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
▶மார்ச்- 11 ▶மாசி – 27 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 01:30 PM – 02:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 03:00 AM – 04:30 AM ▶எமகண்டம்: 09:00 PM – 10:30 PM ▶குளிகை: 12:00 AM- 01:30 AM ▶திதி: திரயோதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: பூராடம் ▶நட்சத்திரம் : ஆயில்யம்.
X தளம் முடங்கியது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார். அதாவது, X தளம் மீது பெரும் சைபர் தாக்குதல் நடப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தினமும் நடப்பதாகவும், இதன் பின்னணியில் ஒரு குழு (அ) நாடு இருக்கலாம் என சந்தேகித்துள்ளார். தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் X தளம் நேற்று ஒரே நாளில் 3 முறை முடங்கியது.
இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை சைலண்ட் ஹீரோ என்று கேப்டன் ரோஹித் சர்மா புகழ்ந்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி குறித்து பேசுகையில், தாம் துவக்க ஆட்டக்காரராக 79 ரன்கள் குவித்ததை சுட்டிக்காட்டினார். ஒருவேளை தாம் ரன் குவிக்க தவறினாலும் ஸ்ரேயாஸ், அக்சருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது பணியை செய்திருப்பார் என்றும் ரோஹித் கூறினார். இப்போட்டியில் ஸ்ரேயாஸ் 48 ரன்கள் சேர்த்தார்.
வாடிக்கையாளர்களுக்கு ₹100க்கு புதிய ரிசார்ஜ் பிளானை JIO அறிமுகம் செய்துள்ளது. JIO சினிமா, டிஸ்னி HOTSTAR நிறுவனங்கள், ‘JIO HOTSTAR’ என்ற பெயரில் அண்மையில் ஒரே நிறுவனமாக இணைந்தன. இந்நிலையில், ஜியோவின் ₹100 புதிய பேக்கில், 90 நாட்களுக்கு ‘JIO HOTSTAR’ சந்தாவுடன், 5 GB டேட்டாவும் வழங்கப்படுகிறது. வரும் 22ம் தேதி தொடங்கும் IPL-ஐ கருத்தில் கொண்டு, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்- பட்டதாகக் கூறப்படுகிறது.
இன்று (மார்ச் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.