India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. * தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை *அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசு வேலை * உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு * தொகுதிக்கு ஒரு அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும். திருநங்கையருக்கு 1% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டார்டிகாவில் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முட்டை எந்த விலங்கினுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. கோழி முட்டை போல வலுவான ஓடு இல்லாமல் இந்த முட்டையின் ஓடு மிருதுவானதாக இருக்கிறது. ஆகையால், இது கடல் பிராணியான மொசாசர்ஸ் விலங்கினுடையதாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. யானைப் பறவையின் முட்டைக்குப் பிறகு இதுதான் உலகின் பெரிய முட்டை என்றும் கூறப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசு அடல் பென்சன் யோஜனாவை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் மாதந்தோறும் ₹5000 ஓய்வூதியம் பெறலாம். ஏழைகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்கள், அமைப்பு சாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் (18 – 40 வயதுக்குள்) இத்திட்டத்தில் இணையலாம். இத்திட்டத்தில் தினம் ₹7 வீதம் மாதம் ₹210 முதலீடு செய்தால், 60 வயதை அடையும் போது, ஓய்வூதியமாக ₹5000 வீடு தேடி வரும்.
மஹாராஷ்டிராவில் ஹிந்துக்களுக்கென ஹிந்துக்களால் நடத்தப்படும் பிரத்யேக ஜத்கா இறைச்சி கடைகள் செயல்பட உள்ளதாக அம்மாநில அமைச்சர் நிதேஷ் ராணே அறிவித்துள்ளார். இதற்கென ‘Malhar’ சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஹலால் முறைக்கு மாற்றாக இந்த ஜத்கா முறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஹிந்து மரபு படி, விலங்குகள் வலியில் துடிக்காமல் ஒரே அடியில் பலியிடப்பட்டு ஜத்கா இறைச்சி தயாரிக்கப்படுகிறது.
உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா (8.3%) 2ஆவது இடத்தில் இருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் (SIPRI) தெரிவித்துள்ளது. முதலிடத்தில் உக்ரைன் (8.8%), 3-5 இடங்களில் கத்தார், சவூதி அரேபியா, பாகிஸ்தான் இருப்பதாக SIPRI கூறியுள்ளது. ஆயுதங்களுக்கு ரஷ்யாவை அதிகம் சார்ந்திருந்த நிலை மாறி, USA, பிரான்ஸ், இஸ்ரேலிடம் தற்போது இந்தியா அதிக ஆயுதம் வாங்கி உள்ளதாகவும் SIPRI குறிப்பிட்டுள்ளது.
ஜெயலலிதாவை அதிமுகவினர் அம்மா என அழைப்பார்கள். CM ஸ்டாலினை திமுகவினர் அப்பா என பிரசாரம் செய்து வருகின்றனர். இதே பாணியில் விஜய், தன்னை மக்களிடையே அண்ணா என அடையாளப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தளபதி என்பதற்கு பதில் அண்ணா என விஜய்யை அழைக்க வேண்டும் என தவெகவினர் கேட்டுக் கொள்ளப்பட்டு இருப்பதாகவும், அண்ணா என பாடல் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு மற்றும் நிதி உதவிகளை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன்படி, விபத்து மரணத்திற்கான நிதியுதவி ₹2.50 லட்சத்தில் இருந்து ₹4 லட்சமாகவும், 2 குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை ₹25 ஆயிரத்தில் இருந்து ₹50 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களின் ஒரு பெண் குழந்தைக்கான திருமண உதவித்தொகையும் ₹60,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தனது அப்பா தான் முதல் ஹீரோ. அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். பாகிஸ்தானில் அப்பாவுக்காக மகள் செய்த தியாகம் சோகத்தில் முடிந்துள்ளது. 20 வயது பெண் Muqaddas, உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தைக்காக, தனது கல்லீரலை தானம் செய்துள்ளார். இதனையடுத்து நடந்த சிகிச்சையில் இளம்பெண் உயிரிழந்துள்ளார். அப்பாவை காப்பாற்ற உயிரைவிட்ட Muqaddas தான் உண்மையான Dad’s Little Princess
பனிப்போர் காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புக்காக நேட்டோ உருவாக்கப்பட்டது. இதிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என அதிபர் டிரம்பின் ஆலோசகரான எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புக்காக அமெரிக்கா ஏன் நிதியை அதிகம் செலவிட வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். அப்படி அமெரிக்கா வெளியேறினால், நேட்டோவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.
2020ஆம் ஆண்டு இதே நாளில்தான் கொரொனாவை பெருந்தொற்றாக (pandemic) உலக சுகாதார மையம் அறிவித்தது. 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவில் முதல் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. அது, 2020 ஜனவரி மாதத்தில் உலகம் முழுவதும் பரவியது. பின்னர், 2020 மார்ச் மாதத்தில் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் நடந்த லாக்-டவுன், மாஸ்க், தடுப்பூசி, குவாரண்டைன் கதைகள் எல்லாம் உங்களுக்கே தெரியும்.
Sorry, no posts matched your criteria.