News March 10, 2025

மண் இல்லாமல் கஞ்சா வளர்ப்பு… சிக்கிய பலே ஆசாமி!

image

Hydroponic எனப்படும் முறையில் மண் இல்லாமல் கஞ்சா செடிகள் பயிரிட்டு கடத்தலில் ஈடுபட்டவரை கோவா போலீஸ் கைது செய்துள்ளது. அவரிடம் இருந்து ரூ.11.67 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவா வரலாற்றில் இவ்வளவு மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறை என போலீஸ் கூறியுள்ளது. கஞ்சா பயிரிட்டவர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News March 10, 2025

வதந்தியால் பாழாய் போன கெரியர்: கஸ்தூரி

image

தனக்கு 20 வயதாக இருந்த போது, 60 வயது நடிகருடன் உறவில் இருந்ததாக கிசுகிசு வந்ததால், தனது சினிமா கெரியரே பாழாய் போனதாக கஸ்தூரி வேதனையுடன் தெரிவித்துள்ளார். அந்த நடிகர் தனக்கு பெரிய வீடு வாங்கி கொடுத்து, துபாயில் செட்டில் செய்ததாக வெளியான வதந்தியால், தனது வீட்டில் நடிக்க வேண்டாம் என கூறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் காரணமாகவே, வெறும் 8 ஆண்டுகள் மட்டுமே சினிமாவில் நடித்ததாக தெரிவித்துள்ளார்.

News March 10, 2025

CT கோப்பையுடன் இந்திய வீரர்கள் பேரணியா?

image

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற IND வீரர்கள் மும்பையில் கோப்பையுடன் பஸ் பேரணி சென்றனர். அவர்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல், CT கோப்பையுடன் இந்திய வீரர்கள் பேரணி செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், துபாயில் இருந்து வீரர்கள் தனித்தனியாக அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வதாக கூறப்படுகிறது. அதனால், பஸ் பேரணிக்கு வாய்ப்பில்லையாம்.

News March 10, 2025

துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த காரணம் என்ன?

image

நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து தங்கம் கடத்தியது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. தங்கம் கடத்த துபாயைத் தேர்வு செய்வது ஏன் தெரியுமா? அங்கு தங்கத்திற்கு எந்த வரியும் விதிக்கப்படுவதில்லை. இதனால், உலகின் தங்க விற்பனை மையமாக துபாய் திகழ்கிறது. மேலும், துபாயில் இந்தியாவை விட தங்கத்தின் விலை கிராமிற்கு 300 ரூபாய் வரை குறைவு. இதன் காரணமாகவே தங்கம் கடத்துபவர்கள் துபாயைத் தேர்வு செய்கின்றனர்.

News March 10, 2025

ரூ.1.93 லட்சம் கோடிக்கு நகை அடகு வைத்துள்ள TN பெண்கள்

image

தங்கம் மீது ஆசையில்லாத பெண்கள் இல்லை எனலாம். அதே தங்கம்தான் சில குடும்பங்களின் அவசர தேவைக்கும் உதவுகிறது. 2024 டிசம்பரில் எடுக்கப்பட்ட ஆய்வில் தமிழகப் பெண்கள் ரூ.1,93,249 கோடிக்கு நகை அடகு வைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், நாட்டிலேயே தமிழகப் பெண்கள்தான் நகை அடகு வைப்பதில் முதலாவதாக இருப்பதும், 2020 டிசம்பரில் இது ரூ.62,578 கோடியாக இருந்து பிறகு 3 மடங்கு அதிகரித்ததும் தெரிய வந்துள்ளது.

News March 10, 2025

BREAKING: X தளம் மீண்டும் முடங்கியது

image

உலகம் முழுவதும் X தளம் முடங்கியுள்ளதால் பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கோடி பேர் பயன்படுத்தும் குறுஞ்செய்தி தளமான X, தகவல் பரிமாற்றத்திற்காக பயன்பட்டு வருகிறது. இன்று மதியம் அது சில நிமிடங்கள் முடங்கிய நிலையில், தற்போது மீண்டும் முடங்கியிருக்கிறது. செய்தி பரிமாற்றத்தின் முக்கிய தளமாக இருக்கும் X முடங்கியிருப்பது தகவல் பரிமாற்றத்தை பாதித்துள்ளது.

News March 10, 2025

கப் ஜெயித்த IND அணிக்கு ₹20 கோடி பரிசு

image

CT கோப்பையை வென்ற IND அணிக்கு ₹20 கோடியை ICC பரிசாக வழங்கியுள்ளது. அதேபோல், ரன்னரான NZக்கு ₹9.72 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 12 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபியை நாட்டுக்கு பெற்று தந்த காரணத்தால், இந்திய அணி வீரர்களுக்கு BCCI பரிசு வழங்கி கவுரவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த CT ஃபைனலில் NZஐ 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் IND வீழ்த்தியது.

News March 10, 2025

இரட்டை வேடம் போடும் திமுக : தவெக தாக்கு

image

மதுரையில் மத நல்லிணக்க பேரணிக்கு திமுக அரசு அனுமதி மறுத்தது எந்த வகையில் நியாயம் என்று தவெக கேள்வி எழுப்பியுள்ளது. அனுமதி மறுத்ததன் மூலம் மத நல்லிணக்கம் தொடர்பாக திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், பாஜக மீதான தனது மறைமுக பாசத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை என்றும் விமர்சித்துள்ளது. மேலும், கொஞ்சம், கொஞ்சமாக திமுக அரசின் சாயம் வெளுக்க தொடங்கி உள்ளதாக கடுமையாக சாடியுள்ளது.

News March 10, 2025

6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் 59% இந்தியர்கள்

image

LocalCircles சமூகவலைதளம் 40,000 இந்தியர்களிடம் தூங்குவது குறித்து ஆய்வு நடத்தியது. அதில் 39% பேர் 6- 8 மணி நேரமும், மேலும் 39% பேர் 3-6 மணி நேரமும், 2% பேர் 8-10 மணி நேரமும், 20% பேர் 4 மணி நேரமும், 59% பேர் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதும் தெரிய வந்துள்ளது. வாஸ்ரூம் செல்வது, அதிகாலை வேலை, கொசுக்கடி போன்றவையே தங்கள் தூக்கம் பாதிக்கப்பட காரணம் என அவர்கள் கூறியுள்ளனர்.

News March 10, 2025

இப்படியுமா சாவு வரும்!

image

ஜார்கண்ட்: பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 சிறார் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். பட்டாசுகளை வெளியே வைத்திருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் பயந்து போய் அனைவரும் கடைக்கு உள்ளே சென்று சாத்திக் கொண்டதாகவும் FIRஇல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைக்குள்ளே புகை சூழ்ந்ததால், மூச்சடைத்து 5 பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் வெளியே ஓடியிருந்தால் மரணம் ஏற்பட்டிருக்காது என்று போலீசார் கூறுகின்றனர்.

error: Content is protected !!