India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. பூஜையுடன் தொடங்கிய டப்பிங் பணிகள் தொடர்பான புகைப்படங்களைத் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் பகிர்ந்துள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
தமிழகத்தில் வரும் 11ஆம் தேதி நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக RMC கணித்துள்ளது. மேலும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வரும் 12ஆம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதம் இன்று அனல் பறந்தது. இந்த விவாதத்தின் போது பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் சமஸ்கிருதத்தில்தான் பூஜைகள் நடப்பதாகவும், ஆனால், தற்போது தேர்தல் பயத்தில் மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பதாகவும் அவர் கூறினார். மேலும், தமிழை விட சமஸ்கிருதமே பழமையான மொழி என்றும் அவர் தெரிவித்தார்.
CT கோப்பையை இந்திய அணி வென்றதற்கு பாராட்டு குவிந்து வருகிறது. முன்னாள் வீரர் அஸ்வின், தனது X தளத்தில், ரோஹித் படைக்கு வாழ்த்துகள் எனப் பதிவிட்டு, கம்பீர் நிம்மதி அடைந்திருப்பார் எனவும் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் கம்பீர் BGT தொடரில் ஏற்பட்ட தோல்வியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஒருவேளை CT கோப்பையையும் தவற விட்டிருந்தால், அவரின் பதவிக்கே அது சிக்கலாகவே மாறியிருக்கும்.
தமிழக MP-க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? என தர்மேந்திர பிரதானுக்கு CM ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். NEP, மும்மொழிக் கொள்கையை, தமிழக அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என தனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?. நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது என்றும் எதிர்வினையாற்றியுள்ளார்.
சமையல் எரிவாயு ₹318க்கு (₹500 மானியம்) வழங்கப்படும் என்று பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. * ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை ₹1000இல் இருந்து ₹2000ஆக உயர்த்தப்படும். *முதியோர்/ ஆதரவற்றோர் உதவித்தொகை ₹3000ஆக உயர்த்தப்படும். *வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ₹5000 வழங்கப்படும். *மின் கட்டணம் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் பிரதானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். PM SHRI திட்டத்தில் முதலில் கையெழுத்திட முன்வந்த TN CM, பின்னர் யூடர்ன் அடித்துவிட்டதாக அமைச்சர் குற்றம்சாட்டினார். யாரோ ஒரு சூப்பர் முதல்வர் இதன் பின்னணியில் இருப்பதாகவும் விமர்சித்திருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பார்லிமென்ட் வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
PM SHRI பள்ளிகள் விவகாரம் தொடர்பாக திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் ஜெயக்குமார். இதுகுறித்து பேசிய அவர், PM SHRI திட்டத்தை ஸ்டாலின் முதலில் ஏற்றுக்கொண்டதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதை சுட்டிக்காட்டினார். மேலும், இதிலிருந்து திமுக பச்சோந்தித்தனமான சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்வது உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என்ற அறிவிப்பால் தென் மாநிலங்களில் தொகுதிகள் குறையலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதனால், ஆந்திர CM சந்திரபாபு நாயுடு, தமிழக CM ஸ்டாலின் ஆகியோர் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க ஊக்கப்படுத்துகின்றனர். இதில் ஒருபடி மேலே போய், அதிக குழந்தை பெறுபவர்களுக்கு பசு, கன்று, ₹50,000 என பரிசுகளை அறிவித்திருக்கிறார் TDP எம்பி அப்பலா. உங்கள் கருத்து என்ன?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவித்து வருகிறார். ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுனிதா மற்றும் பட்ச் வில்மோர் பூமி திரும்ப முடியவில்லை. இந்நிலையில் இருவரும் மார்ச் 16ஆம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.