India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2023 ODI WC தோல்விக்கு இவர்தான் காரணம். பண்ட் இருக்கும்போது இவர் ஏன் விளையாடுகிறார்? இதெல்லாம் KL ராகுலுக்கு எதிராக CTல் வந்த விமர்சனங்கள். ‘நான் வேறு என்ன செய்ய வேண்டும்?’ என சமீபத்தில் ராகுல் கொதித்தார். AUSக்கு எதிரான போட்டியில் அரையிறுதியில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்றது மட்டுமின்றி, இறுதிப் போட்டியில் அணி அழுத்தத்தில் இருந்தபோது ராகுல் (34*) விளையாடிய விதமும், வென்ற விதம் தனித்துவமானது.
இன்று (மார்ச் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
சென்னை அய்யப்பன்தாங்கலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், இளைஞருக்கு பெண் வேடமிட்டு வந்து ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ வெளியாகியது. பின்னர், அது பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் என செய்திகள் வந்தன. இந்நிலையில், அது சினிமா படப்பிடிப்பு என்றும், அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விக்ரமன் எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்தார்.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் இப்போதே தயாராகி வருகிறது. இந்நிலையில் பத்மநாபபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான் தங்கம் நிறுத்தப்படுவதாக இபிஎஸ் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜான் தங்கம் குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ள நிலையில், இந்த முறை எம்எல்ஏ ஆக வேண்டும், வேட்பாளர் நீதான் என இபிஎஸ் உறுதியளித்துள்ளாராம்.
CT இறுதி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 83 பந்துகளில் 76 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் ரோகித் சர்மா, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர் முழுவதும் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக, நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவிந்திராவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 263 ரன்களை அவர் குவித்துள்ளார்.
➤மேஷம் – நலம் ➤ரிஷபம் – நன்மை ➤மிதுனம் – நற்செயல் ➤கடகம் – தடங்கல் ➤ சிம்மம் – ஆர்வம் ➤கன்னி – சாந்தம் ➤துலாம் – செலவு ➤விருச்சிகம் – சிக்கல் ➤தனுசு – வெற்றி ➤மகரம் – இன்பம் ➤கும்பம் – விவேகம் ➤மீனம் – இரக்கம்.
ஐசிசி CT தொடரில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு CM மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சாம்பியன் ட்ராஃபி தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கும், தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணிக்கும் எனது வாழ்த்துகள் என ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், தரமான ஆட்டத்தின் மூலம் அதிரடியான வெற்றியை கேப்டன் ரோஹித் கொடுத்துள்ளாதகவும் அவர் புகழ்ந்துள்ளார்.
2013-ல் தோனி தலைமையில் இந்திய அணி, சாம்பியன் டிராபியை வென்றது. 12 ஆண்டுகளுக்கு பின், ரோகித் தலைமையில் மீண்டும் வென்றதை, நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐசிசி டிராபி வென்றதற்கு பெருமை அடைவதாகவும், தொடர் முழுவதுமே இந்தியா சிறப்பாக விளையாடியதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பையை 3வது முறையாக கைப்பற்றிய முதல் அணி என்ற புதிய வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதனையடுத்து, ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை ரோகித் படை வென்றதை அடுத்து, நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். WAY2NEWS சார்பாகவும் இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
சிக்கன், மட்டன், மீன் போன்ற அசைவ உணவுகளை சாப்பிட்டுவிட்டு சில விஷயங்களை மறந்தும் செய்யக் கூடாது. குறிப்பாக, இந்த உணவுகளை சாப்பிட்ட பின்னர், பால், தயிர், மோர் போன்ற பால் பொருட்களை உட்கொள்ளக் கூடாது. இது அஜீரணத்தையும், ஒருவித தோல் அலர்ஜியையும் ஏற்படும். அதேபோல, அசைவம் சாப்பிட்டுவிட்டு டீ குடித்தால் நெஞ்செரிச்சல் ஏற்படும். மட்டன் சாப்பிட்டு தேன் உண்டால் வயிற்றுக் கோளாறு ஏற்படும்.
Sorry, no posts matched your criteria.