News March 10, 2025

PHOTOS: கோப்பையுடன் கிரிக்கெட் வீரர்கள்

image

ICC சாம்பியன்ஸ் டிராபியை வென்றதன் மூலம் 12 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்தியா. தோனியின் தலைமையில் 2013ல் வெற்றி பெற்ற பிறகு, 2017ல் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் இறுதிப் போட்டியில் PAKயிடம் தோல்வி பெற்றது. இம்முறை ரோஹித் அணி வாய்ப்பை கைப்பற்றியது. தொடரில் ஒரு தோல்வி கூட இல்லாமல் கோப்பையை IND வென்றுள்ளது. அந்த வகையில், வீரர்கள் CT கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

News March 10, 2025

வரிப் பகிர்வு குறித்து விவாதிக்க விசிக ஒத்திவைப்பு நோட்டீஸ்

image

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு தொடர்பாக விவாதிக்கக் கோரி மக்களவையில் விசிக தலைவர் திருமாவளவன் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதில், மாநிலங்களுக்கான வரி பகிர்வை 40% ஆக குறைக்க 16வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. GST, செஸ் போன்றவற்றால் மாநிலங்களின் வருவாய் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிகாட்டி, வரி பகிர்வை குறைக்க நினைப்பது நியாயம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

News March 10, 2025

இன்றைய பொன்மொழிகள்!

image

*சரியான ஒன்றுக்காக துணைநிற்க மறுக்கும் போது ஒரு மனிதன் இறந்துவிடுகிறான். *நீதிக்கு துணைநிற்க மறுக்கும்போது ஒரு மனிதன் இறந்துவிடுகிறான். *உண்மைக்கு துணைநிற்க மறுக்கும் போது ஒரு மனிதன் இறந்துவிடுகிறான். *சரியானது எது என்பதை அறிந்தும் அதைச் செய்யாமல் இருப்பதை விட உலகிலேயே தவறான செயல் வேறெதுவும் இல்லை
– மார்ட்டின் லூதர் கிங்.

News March 10, 2025

விமர்சனங்களுக்கு வெற்றியால் பதிலடி கொடுத்த ரோஹித்

image

டெஸ்டில் நியூசி., அணியிடம் தோல்வி.. ஆசி.,யிடமும் இதே நிலை.. இதுதவிர ஃபார்ம் இல்லாததால் பிரச்சனை.. ரோஹித்துக்கு CT தான் முடிவு என பலரும் விமர்சிக்க.. இதற்கெல்லாம் தனது கேப்டன்சியுடன் பதிலடி கொடுத்துள்ளார் ரோஹித். முன்னாள் வீரர்களின் பேச்சைக் கேட்காமல் 4 ஸ்பின்னர்களை அணியில் சேர்த்து முடிவு சரியானது என்பதை நிரூபித்தார். கோப்பையை வென்று அவரை விமர்சித்தவர்களை மூக்கின் மேல் விரல் நீட்ட வைத்தார்.

News March 10, 2025

ராகுல் உதவியால் தொழிலதிபர் ஆகும் தொழிலாளி

image

ராகுல் காந்தி செய்த தொடர் உதவியால் செருப்பு தைக்கும் தொழிலாளி, தொழிலதிபராக உள்ளார். உ.பி. சுல்தான்பூரில் உள்ள தொழிலாளி ராம்செட்டின், செருப்பு கடைக்கு கடந்தாண்டு ஜூலை மாதத்தில் சென்று ராகுல் உரையாடினார். தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு அவரை தோல்பொருள் வியாபாரியிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, ‘ராம்செட் மோச்சி’ என்ற பெயரில் புதிய காலணி பிராண்டை அந்த நபர் பெற உள்ளார்.

News March 10, 2025

CUET PG நுழைவு சீட்டு வெளியீடு

image

மத்திய பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான CUET தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியாகியுள்ளது. முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான CUET நுழைவுத் தேர்வுக்கு 4,12,024 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு வரும் மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்.1ஆம் தேதி வரை கணினி வழியில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டை <>https://exams.nta.ac.in/CUET-PG<<>> என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

News March 10, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 202 ▶குறள்: தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். ▶பொருள்: தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்..

News March 10, 2025

CT: அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்

image

CTல் அதிக ரன்கள் குவித்த நியூசி., வீரர் ரச்சின் ரவீந்திரன் (263) போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து IND வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் (243), பென் டக்கெட் (227), ஜோ ரூட் (225) ஆகியோர் அடுத்தடுத்து இடம்பிடித்துள்ளனர். நியூசி., பந்துவீச்சாளர் ஹென்றி (10W), வருண் சக்ரவர்த்தி (9), சான்ட்னர் (9), ஷமி (9), பிரேஸ்வெல் (8) ஆகியோர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

News March 10, 2025

இன்றைய (மார்ச் 10) நல்ல நேரம்

image

▶மார்ச்- 10 ▶மாசி – 26 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 06:30 AM – 07:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 09:00 AM – 10:00 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM ▶எமகண்டம்: 10:30 PM – 12:00 PM ▶குளிகை: 01:30 AM- 03:00 AM ▶திதி: துவாதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: மூலம் ▶நட்சத்திரம் : பூசம்.

News March 10, 2025

ஒரே நாளில் ஒர் ஆண்டுக்கான மழை… 13 பேர் பலி

image

அர்ஜென்டினாவின் பஹியா பிளாங்கா நகரில் நேற்று முன்தினம் புயலோடு கனமழை கொட்டித் தீர்த்தது. ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை சில மணி நேரங்களில் பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். மேலும் வெள்ளத்தில் வீடுகள், ஹாஸ்பிடல்கள் மிதப்பதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். கரை புரண்டு ஓடிய வெள்ளத்தில் வாகனங்களும் அடித்து செல்லப்பட்டன.

error: Content is protected !!